காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 9.2 டி.எம்.சி தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்திற்கு ஜூன் மாதத்திற்குள் 9.2 டி,எம்.சி தண்ணீரை உடனடியாக திறந்து விடவேண்டும்  என உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லியில் மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழக - கர்நாடக பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்போது காவிரி மேலாண்மை ஆணையர் மசூத் உசேன் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் கர்நாடக அரசு தமிழகத்திற்கு தேவையான நீரை திறந்து விடவில்லை என தமிழக அரசு சார்பில் வாதம் செய்யப்பட்டது. காவிரி வேளாண்மை ஆணையத்தில் நடவடிக்கைகள் உச்சநீதிமன்ற உத்தரவை மீறுவதாக உள்ளது. மே மாதத்திற்குள் 2 டிஎம்சி நீரை உடனடியாக கர்நாடகா வழங்க உத்தரவிட வேண்டும் என ஆணையத்தில் வலியுறுத்தப்பட்டது.

 

காவிரியில் இருந்து ஜுன் மாதம் திறக்க வேண்டிய 9.19 டிஎன்சி தண்ணீரை திறந்துவிடவும் வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து தமிழகத்திற்கு 9.2 டி.எம்.சி தண்ணீரை ஜூன் மாதத்திற்குள் திறந்து விட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தமிழகத்துக்கு கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் தண்ணீரை திறக்குமா கர்நாடகா?? என்கிற கேள்வி எழுந்துள்ளது.