Asianet News TamilAsianet News Tamil

அவங்க தண்ணீ தருவாங்களா? உச்சநீதிமன்றத்துக்கு அந்த நம்பிக்கை இருக்கா...! டுவிட்ஸ்ட் வைத்த துரைமுருகன்

Cauvery issue Duraimurugan comment
Cauvery issue: Duraimurugan comment
Author
First Published May 18, 2018, 3:18 PM IST


காவிரி மேலாண்மை ஆணையம் சர்வ வல்லமை படைத்ததாக இருக்க வேண்டும் என்றும், ஆணையம் மீது நம்பிக்கை இருக்கிறதா? இல்லையா? என்பது கேள்வி அல்ல... அது உச்சநீதிமன்றத்துக்கு இருக்கிறதா? என்பதுதான் கேள்வி என்று திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

Cauvery issue: Duraimurugan commentகாவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான உத்தரவை பிறப்பிக்கும் அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கே உள்ளது என்ற திருத்தம் மேற்கொள்ளப்பட்ட வரைவு செயல் திட்டத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. காவிரி வரைவு திட்டத்தை மே 14 ஆம் தேதி மத்திய அரசு தாக்கல் செய்தது. அதன் நகலை கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு கொடுக்கப்பட்டு அதன் மீதான விசாரணை நடத்தப்பட்டது. நடந்த வாதங்களின் அடிப்படையில் திருத்தப்பட்ட வரைவு திட்டத்தை நேற்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதன்படி அமைக்கப்பட்ட குழுவிற்கு காவிரி ஆணையம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

Cauvery issue: Duraimurugan comment

இதன் தலைமையகம் பெங்களூரில் இருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளது. நீர்பங்கீடு குறித்த இறுதி முடிவை ஆணையமே எடுக்கும். ஆணையம் விரும்பினால் மத்திய அரசு தலையிடும் என கூறியுள்ளது. அணையைத் திறக்கும் அதிகாரம் ஆணையத்துக்கு வேண்டுமென தமிழக அரசு கோரியது அதற்கான தீர்ப்பை இன்று சொல்வதாக கூறி நீதிமன்றம் வழக்கை ஒத்தி வைத்தது.

இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனடியாக அமைக்க வேண்டும். பருவமழை தொடங்கும் முன்பு ஜூன் முதல் வாரத்துக்குள் திருத்தப்பட்ட வரைவு திட்டத்தை அரசு இதழில் வெளியிட வேண்டும், புதிதாக அமைக்கப்பட்டதற்கே ஆணையத்துக்கே முழு அதிகாரம் அணையின் நீர் இருப்பு, நீர் வரத்து விவரங்களை ஒவ்வொரு மாதமும் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும். இந்த தகவல்களை வைத்து நீர் திறக்க வேண்டும் என்ற ஆணையமே மாநில அரசுக்கு உத்தரவிடும். அப்போது, 

Cauvery issue: Duraimurugan comment

நீர் இருப்பு விவரத்தை தெரிவிக்க மாட்டோம் என கூறிய கர்நாடாக அரசின் வாத்த்தை நீதிபதிகள் நிராகரித்துள்ளனர். காவிரி ஆணையம் அமைக்கப்பட்டது குறித்து பல்வேறு தரப்பினர் தங்கள் கருத்துக்களைக் கூறி வருகின்றனர். இந்த நிலையில், திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கூறும்போது, உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன் என்றார். மத்திய அரசு அதனை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். 

டெல்டா மாவட்டமே வறண்டு போயுள்ள நிலையில், காவிரி நீர் கிடைக்க ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆணையம் சர்வ வல்லமை படைத்ததாக இருக்க வேண்டும் என்று கேட்டிருந்தோம் அதற்கான உத்தரவை உச்சநீதிமன்றம் அளித்ததா? என்பது தெரியவில்லை என்றார். உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இருந்த குறை இதில் இருக்கக் கூடாது. இந்த ஆணையம் மீது நம்பிக்கை இருக்கிறதா? இல்லையா? என்பது கேள்வி அல்ல. உச்சநீதிமன்றத்துக்கு நம்பிக்கை இருக்கிறதா? என்பதுதான் கேள்வி என்று துரைமுருகன் கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios