திருவண்ணாமலை

கருணாநிதி கேட்டுக் கொண்டதற்கு இணங்க காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது என்று திமுக கொள்கை பரப்புச் செயலர் ஆ.ராசா திருவண்ணாமலையில் நடந்த செயற்குழு கூட்டத்தில் கூறினார்.

திருவண்ணாமலை மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடைப்பெற்றது.  திருவண்ணாமலை, அண்ணா சிலை எதிரே நடந்த இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சி.என்.அண்ணாதுரை தலைமை தாங்கினார்.

தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், நகரச் செயலர் ப.கார்த்திவேல்மாறன், மருத்துவர் எ.வ.வே.கம்பன், மாவட்ட துணை அமைப்பாளர்கள் பொன்.தனசு, அ.அருள்குமரன், நகராட்சி குழுத் தலைவர் குட்டி க.புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

மாவட்ட துணை அமைப்பாளர் சு.விஜி (எ) விஜியராஜ் வரவேற்றார். மாவட்ட திமுக செயலரும், எம்எல்ஏவுமான எ.வ.வேலு கூட்டத்தை தொடக்கி வைத்தார். 

இதனைத் தொடர்ந்து, சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திமுக கொள்கை பரப்புச் செயலர் ஆ.ராசா பேசியது: 

"காவிரி பிரச்சனைக்காக நடுவர் மன்றம் வேண்டும் என்று சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தவர் கருணாநிதி. 

கடந்த 1990-ல் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, கருணாநிதி கேட்டுக் கொண்டதற்கிணங்க காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இதன்மூலம் 205 டிஎம்சி தண்ணீரை இடைக்கால நிவாரணமாக பெற்றுத் தந்தவரும் கருணாநிதிதான்.

1991 - 1996 வரை முதல்வராக இருந்த ஜெயலலிதா காவிரி பிரச்சனையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 1996-ல் கருணாநிதி மீண்டும் முதல்வரான பிறகுதான் 205 டிஎம்சி தண்ணீர் கொடுக்க வேண்டும் என்பது மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது" என்று அவர் கூறினார். 

இந்தக் கூட்டத்தில், வடக்கு மாவட்டச் செயலர் ஆர்.சிவானந்தம், தணிக்கைக்குழு உறுப்பினர் கு.பிச்சாண்டி, மாவட்ட துணைச் செயலர் சாவல்பூண்டி மா.சுந்தரேசன், எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி (செங்கம்), கே.வி.சேகரன் (போளூர்), மாவட்ட துணைச் செயலர்கள் சி.சுந்தரபாண்டியன், 

பாரதி ராமஜெயம், மாவட்ட அமைப்பாளர்கள் கே.வி.மனோகரன், டி.வி.எம்.நேரு, சேஷா.திருவேங்கடம், அனைத்து அமைப்புசாரா தொழில் சங்கங்களின் மாவட்டத் தலைவர் ஏ.ஏ.ஆறுமுகம், நகர இளைஞரணி அமைப்பாளர் சு.ராஜாங்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.