சாதி, மதத்தால் மக்களை பிளவுப்படுத்தும் நோக்கம் கொண்ட ஊர்வலங்கள், யாத்திரைகளை தமிழகம் ஆதரிக்காது என அதிமுக பாஜகவை மறைமுகமாக எச்சரித்துள்ளது.

பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், வேல் யாத்திரையை முடக்க நினைப்பது எதிர்வினையை ஏற்படுத்தும் எனக் கூறியதற்கு அதிமுகவின் அதிகாரப்பூர் நாளேடான நமது அம்மாவில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. சாதியாலும் மதத்தாலும் மக்களை பிளவுபடுத்துகிற உள்நோக்கம் கொண்ட ஊர்வலங்களை யாத்திரைகளை அமைதிப் பூங்காவாக திகழும் தமிழகம் ஆமோதிக்காது. ஆதரிக்காது என்பதை உரியவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மனிதத்தை நெறிப்படுத்தவே மதங்களன்றி வெறிபடுத்துவதற்காக அல்ல என்பதை இந்திய தேசத்திற்கே உணர்த்துகிற பகுத்தறிவு மண். இந்த திராவிடத்தின் தொட்டிலாம் தமிழகம் என்பதை தொடர்ந்து தமிழ்நாட்டு மக்கள் நிரூபித்திருக்கிறார்கள். ஓம் ஓம் என்று ஒலிக்கும் இந்து மந்திரத்தின் பொருள் அமைதி, நிறைவு கொள் என்பதாகும். அதுபோலவே ஆமென் என்கிற கிறிஸ்தவ மந்திரத்தின் பொருளுடைய மந்திரத்தின் அர்த்தமும் அனுமதி கொள்.  சாந்தமடை என்பதாகும். அது போலவே இஸ்லாம் என்பதன் பொருளும் அமைதி, சமத்துவம் என்பதையே உணர்த்துகிறது.

இப்படி மதங்கள் அனைத்தும் போதிப்பது அமைதி, அன்பு, சாத்வீகத்தை தான். இப்படி இருக்க அந்த மதங்களின் பெயரால் வாக்கு வங்கி அரசியலுக்கு வழிபடுவதை சாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட அதிமுக அனுமதிக்காது. இதனை வேல் யாத்திரை செல்பவர்கள் உணர வேண்டும். அமைதி தவழும் தமிழகத்தில் மக்கள் பின்பற்றும் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் உணர்ந்து நடக்க வேண்டும். அது கருப்பர் கூட்டம் ஆனாலும் சரி. காவி கொடி பிடிப்பவர்கள் ஆனாலும் சரி எனத் தெரிவித்துள்ளது. இது பாஜனவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அமித் ஷா தமிழகம் வரவுள்ள நிலையில் அதிமுக தரப்பில் இப்படியொரு செய்தி வெளியாகியுள்ளளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.