Asianet News TamilAsianet News Tamil

Caste atrocities: கத்தோலிக்க திருச்சபைகளில் சாதி கொடுமை.. ரஞ்ஜித், திருமா கோஷ்டி எங்கோ.. ராமரவிக்குமார் ஆவேசம்

ஹிந்துக்கள் யோசிக்கவேண்டும்.!! இந்து மதத்தில் தீண்டாமை இருப்பதாக வாய்கிழிய பேசுகிறார்கள் .பிற மதத்தில் நிலவும் சரி நிகர் சமானம் இல்லாத நிலைமையை பற்றி என்றும் பேச மாட்டார்கள்! தீண்டாமையை நாங்கள் ஆதரிக்கவில்லை ஆனால் எங்கள் மதத்தில் தீண்டாமை இல்லை என்று சொல்லும் அயோக்கியர்களை ,கட்சிகளை புரிந்துகொள்ளுங்கள் என்று கூறுகிறோம். 

Caste atrocities in the Catholic Churches .. Ranjith, Thirumas team somewhere .. Ramaravikumar asking.
Author
Chennai, First Published Dec 7, 2021, 10:56 AM IST

இந்து மதத்தில்  சாதிக் கொடுமை இருப்பதாக கூறி கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்கள் இப்போது அங்கேயும்  சாதி தீண்டாமை இருப்பதாக கதறுகின்றனர். தங்களை சமூக நீதி காவலர்கள் என்று சொல்லிக் கொள்ளும் திருமாவளவன் பா.ரஞ்சித் கோஷ்டி ஏன் இதற்காக வாய் திறக்கவில்லை என்று இந்து தமிழர் கட்சி நிறுவனத் தலைவர் ராம ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட மக்கள் தலித் மக்கள் சாதி இழிவில் இருந்து விடுபடுவதற்காகவே இந்து மதத்தில் இருந்து கிறித்துவத்தை தழுவியதாக கூறப்படுகிறது.  ஆனால் தற்போது அந்த கிறிஸ்தவ மதத்திலேயே சாதி தீண்டாமை தலைவிரித்து ஆடுவதாக புலம்பல்கள் எழ தொடங்கியுள்ளது. இந்நிலையில் கத்தோலிக்க திருச்சபைகளில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த தலித் மக்களுக்கு  ஆயர், பேராயர் போன்ற பதவிகள் ஒதுக்கப்படுவது இல்லை என்று  புகார்கள் எழுந்துள்ளது. இதை எதிர்ர்த்து பல ஆண்டுகளாக தலித் கிறிஸ்தவ கூட்டமைப்பு தலைவர் ஜான் மேத்யூ குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் அவரின் தலைமையில் ஆர்பாட்டம் ஓன்று நடந்தது. அப்போது செய்தியாளர்களிடம்  பேசிய அவர் கூறியதாவது:- தமிழக கத்தோலிக்க திருச்சபையில் தலித் குருக்களை ஆயர்களாகவும், பேராயர்களாகவும்  நியமிக்க கோரி குரல் கொடுத்து வருகிறோம். இது இட ஒதுக்கீடு போன்ற ஒரு போராட்டம் அல்ல. பலருக்கு தெரியாத, சிலருக்கு தெரிந்த ஒரு விஷயம், கத்தோலிக்க திருச்சபைகளில் தீண்டாமை தலைவிரித்து ஆடுகிறது.

Caste atrocities in the Catholic Churches .. Ranjith, Thirumas team somewhere .. Ramaravikumar asking.

இந்து மதத்தில் இருப்பது போல தனி கல்லறை, தலித் சமூகத்தை சேர்ந்தவர்களின் சடலத்தை எடுத்துச் செல்ல தனி வாகனம், தலித்துகளுக்கு என்று தனி ஆலயம், இப்படி தலித்துகளும் தலித் கிறிஸ்தவர்களும் தீண்டாமை கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். கடந்த பல நூற்றாண்டுகளாக தலித் கிறிஸ்தவர் சமூகத்திலிருந்து ஆயர் அல்லது பேராயர் பொறுப்பிற்கு எந்த குருகளும் நியமிக்கப்படவில்லை. கடந்த 1994 ஆம் ஆண்டு ஒரு வரும், 1997 ஆம் ஆண்டு ஒருவரும், 2004ஆம் ஆண்டு ஒருவரும், 2006ஆம் ஆண்டு ஒருவரும் நியமிக்கப்பட்டனர். பல நூறு ஆண்டுகளுக்கு பின்பு இது நடந்தது. இன்று தமிழக கத்தோலிக்க திருச்சபையில் மூன்று பேராயர்கள் உட்பட 18 ஆயர்கள் உள்ளனர் ஆனால் எதார்த்தத்தில் இதில் ஒரே ஒருவர் மட்டுமே தலித் சமூகத்தைச் சார்ந்தவர். இந்திய அளவில் சுமார் 173 மறைமாவட்டங்கள் உள்ளன, சுமார் 180 துணை ஆயர்களும் 30 ஆயர்களும் உள்ளனர். இவர்களில் 11 பேர் மட்டுமே தலித் கிறிஸ்தவ சமூகத்தை சார்ந்தவர்கள். இதில் தமிழ்நாட்டில் ஒருவர் மட்டுமே தலித் கிறிஸ்தவர் சமூகத்தைச் சார்ந்தவர். இந்திய அளவில் 31 பேராயர்கள் உள்ளனர். இதில் ஒருவர் மட்டுமே தலித் கிறிஸ்தவர் சமூகத்தைச் சார்ந்தவர். ஆனால் இந்தியாவில் தலித் கிறிஸ்தவர்களின் மக்கள் தொகை 80 சதவீதம். 

தமிழகத்தில் 70 சதவீதம் தலித் கிறிஸ்தவர்கள். மீதமுள்ள 30% 25 வகையான சாதி சமூக கிருத்தவர்கள். இந்த ஒப்பீட்டளவில் பார்த்தால் இது மிகப்பெரிய அநீதி, இது மிகப்பெரிய சமூக அநீதி, தலித் கிறித்துவ சமூகத்திற்கு எதிரான அநீதி, கடந்த 14 ஆண்டுகளாக தமிழகத்தில் 10 ஆயர்களும், 3 பேராயர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் கூட தலித் கிறிஸ்தவ சமூகத்தை சார்ந்தவர் அல்ல. எனவே இது இட ஒதுக்கீடு போன்ற ஒரு கோரிக்கை அல்ல, கிறிஸ்தவத்தில் தீண்டாமை தலை விரித்து ஆடுகிறது என்பதை சொல்வதற்கான போராட்டம். ஆயர்கள், பேராயர்கள் நியமனத்தில் தீண்டாமை தலை விரித்து ஆடுகிறது. எனவே இந்த தீண்டாமையை உடனடியாக களையப்பட வேண்டும். 70 சதவீதம் அளவிற்கு வாழும் தலித் கிறிஸ்தவ சமுதாயத்தை சேர்ந்தவர்களை ஆயர்களாகவும், பேராயர்களாகவும்  நியமிக்க வேண்டும். இப்போது 6 மறை மாவட்டங்களுக்கு ஆயர்கள் இல்லாமல் இருக்கிறது. இரண்டு மறை மாவட்டங்களின் ஆயர்கள் ஓய்வுபெற இருக்கிறார்கள், எனவே இந்த இடங்களுக்கு தலித் கிறித்தவர்களை நியமிக்க வேண்டும். இனிவரும் காலங்களில் காலியாகும் அனைத்து இடங்களிலும் விகிதாச்சார அடிப்படையில் தலித் கிறித்தவர்களை நியமிக்க வேண்டும் என தலித் கிறிஸ்தவர்கள் கூட்டமைப்பின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என அவர் வலியுறுத்தியுள்ளார். 

Caste atrocities in the Catholic Churches .. Ranjith, Thirumas team somewhere .. Ramaravikumar asking.

இதை மேற்கோள் காட்டியுள்ள  இந்து தமிழர் கட்சி நிறுவனத் தலைவர் ராம ரவிக்குமார், காட்டமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-  இந்து மதத்திலே சாதிக் கொடுமை  தீண்டாமை உயர்வு தாழ்வு கொடுமை இருக்கின்ற காரணத்தால் சமத்துவம் நிறைந்த இயேசு கிறிஸ்து மதத்திற்கு சென்ற முன்னாள் இந்துக்கள்; முன்னாள் பட்டியல் சமுதாயத்தை சார்ந்த நபர்கள், இப்பொழுது கிறிஸ்துவத்திலும் சாதியின் பெயரால் தீண்டாமை இருக்கிறது. இங்கே ஆயர் பேராயர்களாக பட்டியல் சமுதாயத்திலிருந்து கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்ட எங்களை நியமிப்பதில்லை. எங்களுக்கான உரிமை மறுக்கப்படுகிறது என்று கூறுகின்றனர். அதற்காக தொடர்ந்து களத்தில் போராடி வரும் ஜான் மேத்யூ என்பவர் இந்த குற்றச்சாட்டை வைத்துள்ளார். தமிழ்நாட்டில் சாதிக் கொடுமையில் இருந்து விடுபட பௌத்தம் ஏற்றுக்கொள்வது தான் தீர்வு என்று சொல்லும் பா.ரஞ்சித் கோஷ்டி, திருமாவளவன் கோஷ்டி, இன்ன பிற பௌத்த கொத்தடிமைகள் இந்த கிறிஸ்தவத்தில் நிலவும் சாதிக்கொடுமை தீண்டாமையை எதிர்த்து என்றாவது போராட்டம் ஆர்ப்பாட்டம் ஏதாவது செய்து இருக்கிறார்களா?

ஹிந்துக்கள் யோசிக்கவேண்டும்.!! இந்து மதத்தில் தீண்டாமை இருப்பதாக வாய்கிழிய பேசுகிறார்கள் .பிற மதத்தில் நிலவும் சரி நிகர் சமானம் இல்லாத நிலைமையை பற்றி என்றும் பேச மாட்டார்கள்! தீண்டாமையை நாங்கள் ஆதரிக்கவில்லை ஆனால் எங்கள் மதத்தில் தீண்டாமை இல்லை என்று சொல்லும் அயோக்கியர்களை ,கட்சிகளை புரிந்துகொள்ளுங்கள் என்று கூறுகிறோம். கி வீரமணி சுப வீரபாண்டியன் அருணன் இன்ன பிற "சமூக நீதிதிதிதிதிதிதிதிதி"காவலர்கள் எங்கே இருக்கிறார்கள்? இதுதான் பெளத்தகைகூலிகளின், சமூக நீதி!??"சாக்கிய பௌத்தம் வேரறுப்போம் !சனாதன தர்மம் பாதுகாப்போம்!!" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios