வாகன சோதனையின் போது காரை நிறுத்தாமல் சென்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

வாகன சோதனையின் போது காரை நிறுத்தாமல் சென்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அரசியல் தலைவர் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மறுபுறம் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து, சேலத்தில் பிரசாரம் மேற்கொள்ள மார்ச் 31-ம் தேதி மதியம், 3:00 மணிக்கு, அ.ம.மு.க., துணை பொதுச் செயலர், தினகரன், ஐந்துக்கும் மேற்பட்ட கார்களுடன் வந்தார். அப்போது சேலம் - அரூர் சாலை, ஆச்சாங்குட்டப்பட்டி சோதனைச்சாவடி அருகே, தேர்தல் நிலைக்குழு அதிகாரி மணிமேகலை தலைமையில் அதிகாரிகள், வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். 

அவர்கள், தினகரன் மற்றும் அவரை பின்தொடர்ந்து வந்த 10 வாகனங்களில் தலைமையில் அணிவகுத்து வந்த கார்களை சோதனையிட வழிமறித்தனர். ஆனால், கார்களை நிறுத்தாமல் சென்று விட்டனர். இது குறித்து, மணிமேகலை புகாரின்பேரில் வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.