Asianet News TamilAsianet News Tamil

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு கருணாநிதி பெயரை சூட்டுங்கள்.. எடப்பாடிக்கு உத்தரவிட நீதிமன்றம் சென்ற வழக்கு..!

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரை சூட்ட உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Case filed for karunanidhi naming for dms metro rail station
Author
Chennai, First Published Sep 11, 2020, 8:36 PM IST

சென்னையில் உள்ள 3 மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது பெயரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சூட்டினார். ஆனால், மெட்ரோ ரயில் திட்டத்தை சென்னையில் கொண்டு வந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சூட்டப்படாதது குறித்து கேள்வி எழுந்தது. இந்நிலையில் கலைஞர் தமிழ் பேரவையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்பட்டுள்ளது.Case filed for karunanidhi naming for dms metro rail station
அந்த மனுவில், “ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு ‘அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ’ என்றும் சென்ட்ரல் நிலையத்துக்கு  ‘புரட்சி தலைவர் டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் மெட்ரோ ரயில் நிலையம்’ என்றும் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்துக்கு  ‘புரட்சி தலைவி டாக்டர்.ஜெ. ஜெயலலிதா மெட்ரோ’ ரயில் நிலையம் என்றும் மாற்றப்பட்டன. சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் தொடங்கப்பட்டது. Case filed for karunanidhi naming for dms metro rail station
சென்னையில் மெட்ரோ திட்டம் வர காரணமாக இருந்த கருணாநிதியின் முயற்சியை வரலாற்றிலிருந்து மறைக்கவும், அரசியல் நோக்கத்துடனும் மற்ற தலைவர்களின் பெயர்கள் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு சூட்டப்படுகிறது. எனவே, தேனாம்பேட்டை டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு ‘டாக்டர். கலைஞர் கருணாநிதி டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையம்’ எனப் பெயரை சூட்ட வேண்டும்” என்று மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios