பாஜக கொடிகம்பத்தை பிடுங்கி எறிந்த மாநகராட்சி ஊழியர்கள்.. காவி தொண்டர்கள் 15 பேர் மீது வழக்கு.

மீனம்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பாஜக கொடிக்கம்பத்தை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். ஆனால் அகற்றப்பட்ட கொடிக் கம்பத்தை மீண்டும் அங்கு நட்டதால் போலீசார் பாஜகவினர் 15 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 
 

Case filed against 15 saffron volunteers, corporation employees who uprooted BJP flagpole.

மீனம்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பாஜக கொடிக்கம்பத்தை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். ஆனால் அகற்றப்பட்ட கொடிக் கம்பத்தை மீண்டும் அங்கு நட்டதால் போலீசார் பாஜகவினர் 15 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 

தமிழகத்தில்  காலூன்ற வேண்டும் என பாஜகவினர் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர், அதற்கான பல்வேறு வியூகங்களை அக்கட்சியினர் வகுத்து வருகின்றனர்.  பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதல் கட்சியின் செயல்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. பல்வேறு இடங்களில் பாஜகவை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் அக்கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வரிசையில் பல இடங்களில் பாஜக வினர் கொடிக்கம்பம் அமைத்து வருகின்றனர்.

Case filed against 15 saffron volunteers, corporation employees who uprooted BJP flagpole.

இதையும் படியுங்கள்:  நாடு இல்லாத நாட்டிற்கு 9 மந்திரிகள்.. ஓபிஎஸ், பன்ருட்டி ராமச்சந்திரனை தெருவில் போட்டு புரட்டிய ஜெயக்குமார்.

இந்நிலையில் சென்னை மீனம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  ஜிஎஸ்டி சாலையில் அமைந்துள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் நுழைவாயிலில் பாஜகவை சேர்ந்த ஆலந்தூர் மண்டலம், மீனம்பாக்கம் பகுதி துணைத்தலைவர் கருணாநிதி என்பவர் பாஜகவின் கொடிக்கம்பம் அமைத்தார்.  50க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் புடைசூழ கொடிக்கம்பம் அழைக்கப்பட்டது, இதுதொடர்பாக மாநகராட்சி அலுவலர்கள் மாநகராட்சி இளநிலை பொறியாளர் வடிவுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள்:  பாஜக நெருக்கடிக்கு துணை போகும் காவல்துறை..! பொய்யான வழக்கில் எஸ்டிபிஐ அமைப்பினர் கைது- நெல்லை முபாரக்

பின்னர் இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்து நேரில் பார்வையிட்ட பொறியாளர் மீனம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார், எவ்வித அனுமதியும் இன்றி பாஜக கொடிக்கம்பம் அமைக்கப்பட்ட நிலையில்  கொடிக்கம்பம் மாநகராட்சி ஊழியர்களைக் கொண்டு அகற்றப்பட்டது, உடனே இத் தகவலறிந்த பாஜகவினர் ஆலந்தூர் மண்டல துணைத் தலைவர் கருணாநிதி தலைமையில் 25க்கும் மேற்பட்டோர்  அங்கு கூடினர், மீண்டும் அகற்றப்பட்ட கொடி கம்பத்தை அதே இடத்தில் நட்டனர்.

Case filed against 15 saffron volunteers, corporation employees who uprooted BJP flagpole.

மீண்டும் பாஜகவினர் அனுமதியின்றி கொடிக்கம்பத்தை அமைத்ததால் மீண்டும் அங்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள் போலீசார் உதவியோடு கொடிக்கம்பத்தை அகற்றனர். மீண்டும் மீண்டும் அதே இடத்தில் கொடிக்கம்பத்தை பாஜகவினர் நட்டதால்  15 பேர் மீது மீனம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் பாஜகவினர் 25க்கும் மேற்பட்டோர் ஆலந்தூர் மண்டல நகராட்சி அலுவலகத்தில், அகற்றப்பட்ட கொடிக்கம்பத்தை மீண்டும் ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் அமைக்க வேண்டும் எனக்கூறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios