தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மக்களவை தேர்தலுக்காக கடந்த 23-ஆம் தேதி கள்ளக்குறிச்சி வேட்பாளர் கவுதம சிகாமணிக்கு ஆதரவாக உதயநிதி ஸ்டாலின் கள்ளக்குறிச்சி நான்கு மையில் சந்திப்பில் பரப்புரை மேற்கொண்டு இருந்தார். அப்போது சுமார் நான்கு மணி நேரம் அவரது தேர்தல் பிரச்சாரத்தால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டது. தேர்தல் விதிகளை மீறியதாக உதயநிதி ஸ்டாலின் மீது தேர்தல் பறக்கும்படை அதிகாரி முகிலன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 143, 341,188 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. சங்கராபுரம் எம்.எல்.ஏ உதயசூரியன் மீதும் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.