சசிகலா மீது அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் போலீசில் புகார் அளித்துள்ளார்.

சென்னை: சசிகலா மீது அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் போலீசில் புகார் அளித்துள்ளார்.

அதிமுக பொன்விழாவை முன்னிட்டு அக்டோபர் 17ம் தேதி எம்ஜிஆர் நினைவு இல்லம் சென்ற சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதிமுக கொடியை ஏற்றி கல்வெட்டு ஒன்றையும் திறந்து வைத்தார்.

அந்த கல்வெல்ட்டில் அதிமுக பொது செயலாளர் வி.கே. சசிகலா என்று பெயர் பொறிக்கப்பட்டு இருந்தது. அதிமுகவினரிடையே இந்த விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் என பலரும் சசிகலாவுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தனர். இந் நிலையில் சசிகலாவுக்கு எதிராக போலீசில் புகார் தரப்பட்டு உள்ளது. இந்த புகாரை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்துள்ளார்.

சசிகலா மீது அதிமுக தரப்பில் இருந்து புகார் அளிக்கப்பட்டு உள்ளது,அவரது ஆதரவாளர்களுகக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் சசிகலா தரப்பு நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது போக போக தான் தெரியும் என்று கூறப்படுகிறது.