Asianet News TamilAsianet News Tamil

ரூபா ஐபிஎஸ் மீது வழக்கு... சசிகலா வழக்கறிஞர் அதிரடி!

சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் ராஜபோக வசதிகளை அனுபவித்து வருவதாக தவறான தகவல்களை பரப்பிய சிறைத்துறை முன்னாள் அதிகாரி ரூபா ஐபிஎஸ் மீது வழக்குத் தொடரப்போவதாக சசிகலா வழக்கறிஞர் அசோகன் தெரிவித்துள்ளார். 
 

Case against Rupa IPS ... Sasikala Lawyer Action!
Author
Tamil Nadu, First Published Jan 21, 2019, 5:54 PM IST

சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் ராஜபோக வசதிகளை அனுபவித்து வருவதாக தவறான தகவல்களை பரப்பிய சிறைத்துறை முன்னாள் அதிகாரி ரூபா ஐபிஎஸ் மீது வழக்குத் தொடரப்போவதாக சசிகலா வழக்கறிஞர் அசோகன் தெரிவித்துள்ளார். Case against Rupa IPS ... Sasikala Lawyer Action!

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றனர். இதனை அடுத்து பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் து கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சிறையில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் சிறையில் உள்ள சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாக சிறைத் துறை டிஐஜி ரூபா குற்றம்சாட்டி இருந்தார். அதே போல் அவர் ஷாப்பிங் சென்றுவிட்டு வெளியே சிறைக்குள் வந்த வீடியோவையும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

Case against Rupa IPS ... Sasikala Lawyer Action!

இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

 Case against Rupa IPS ... Sasikala Lawyer Action!

இந்த நிலையில் சென்னையில் இன்று பேட்டியளித்த சசிகலாவின் வழக்கறிஞர் அசோகன் இதனை திட்டவட்டமாக மறுத்தார். ரூபா ஐபிஎஸ் கூறிய அனைத்தும் பொய் என்றும் சசிகலா வெளியில் செல்லவில்லை.சாதாரண சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார் சசிகலா. எந்தவிதமான சொந்த ஆடைகளையும் அணியலாம். அவர் கொண்டு வந்த பைகளில் வழக்கு தொடர்பான ஆவணங்கள் மட்டுமே இருந்தன. முன்னாள் சிறை அதிகாரி ரூபா ஐபிஎஸ் தவறான தகவல்களை பரப்பி உள்ளார். அவர் மீது விரைவில் வழக்குத் தொடர்வோம்’’  என்று அவர் தெரிவித்துள்ளார்.  

Follow Us:
Download App:
  • android
  • ios