Asianet News TamilAsianet News Tamil

#BREAKING எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரை அவமதித்த வழக்கு.. ஆர்.எஸ்.பாரதி பேச்சு குறித்து உச்ச நீதிமன்றம் அதிரடி.!

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரை அவமதித்ததாக திமுக அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி மீது பதியப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 

Case against RS Bharathi quashed...Supreme Court
Author
Delhi, First Published Jul 19, 2021, 1:25 PM IST

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரை அவமதித்ததாக திமுக அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி மீது பதியப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை அன்பகத்தில் கலைஞர் வாசகர் வட்டம் கூட்டத்தில் பேசிய திமுக அமைப்புச் செயலாளரும் எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி ஹரிஜன நீதிபதிகளை நியமனம்‌ செய்தது திமுக தான்‌. உயர் நீதிமன்றத்தில் ஆதிதிராவிடர் உள்ளிட்ட பிரிவினர் நீதிபதியாகப் பதவி ஏற்றது திமுக போட்ட பிச்சை. திமுக தான்‌ தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு தந்தது என சர்ச்சைக்குரிய இழிவான வகையில்‌ பேசினார்.

Case against RS Bharathi quashed...Supreme Court

இதற்கு பல்வேறு தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனையடுத்து, ஆர்.எஸ்.பாரதி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ய மறுப்பு தெரிவித்துவிட்டது.

Case against RS Bharathi quashed...Supreme Court

இதனையடுத்து, இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யும் அளவிற்கு ஆர்.எஸ்.பாரதி பேசியதாக தெரியவில்லை. மேலும், அவரது பேச்சில் உள்நோக்கம் இருப்பதாகவும் தெரியவில்லை. ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை வேண்டும் என்றே குறைகூற வேண்டும் என்பதற்காக பேசியதாக எந்த முகாந்திரமும் இல்லை என்பதால் இந்த வழக்கை ரத்து செய்கிறோம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios