கடந்த 2011-ம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட பொன்முடி, அப்போதை தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாகவும், இந்திய இறையாண்மைக்கும், தேச ஒருமைப்பாட்டிற்கும் ஊறு விளைவிக்கும் வகையில் பேசியதாக அதிமுக நகர செயலாளர் தட்சிணாமூர்த்தி என்பவர் புகார் அளித்திருந்தார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து விமர்சித்ததாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாகவும் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக திருவாரூரில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவதூறு பேச்சு

கடந்த 2011-ம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட பொன்முடி, அப்போதை தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாகவும், இந்திய இறையாண்மைக்கும், தேச ஒருமைப்பாட்டிற்கும் ஊறு விளைவிக்கும் வகையில் பேசியதாக அதிமுக நகர செயலாளர் தட்சிணாமூர்த்தி என்பவர் புகார் அளித்திருந்தார்.

பொன்முடி மீது புகார்

அந்தப் புகாரில் திருவாரூர் நகர காவல் நிலையத்தில் அமைச்சர் பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் 2015-ம் ஆண்டு பொன்முடி வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கு ரத்து

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, திருவாரூர் நகர காவல் நிலையத்தில் அமைச்சர் பொன்முடி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். திமுக அமைச்சரவையில் உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடி இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க;- எதிர்க்கட்சியாக இருந்த போது நீங்கள் கேட்ட அதே கேள்வியை தான் கேட்கிறோம் முதல்வரே.. ஸ்டாலினை சீண்டும் பாஜக.!