Asianet News TamilAsianet News Tamil

கனியை விடாமல் துரத்தும் தூத்துக்குடி சாந்தகுமார்...!! திமுகவுக்கு வந்த புதிய சோதனை...!!

இந்நிலையில் தனது வெற்றியை எதிர்த்து வாக்காளர் ஒருவர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி கனிமொழி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். நடந்து முடிந்த 17 வது மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.


 

case against dmk mp kanimozhi victory by tuticorin voter
Author
Chennai, First Published Oct 14, 2019, 3:54 PM IST

தூத்துக்குடி தேர்தல் வழக்கை வாபஸ் பெறுவது தொடர்பாக செய்தித்தாளில் விளம்பரம் செய்ய வேண்டும் என தெலங்கான ஆளுனர் தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் கனிமொழியின் வெற்றியை எதிர்த்து  சாந்தகுமார் என்ற வாக்காளர் தாக்கல் செய்த மற்றொரு மனுவின்  விசாரணையை ஆக்டோர்பர் 30 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 

case against dmk mp kanimozhi victory by tuticorin voter

தூத்துக்குடி தொகுதி தேர்தல் வழக்கை வாபஸ் பெறுவது தொடர்பாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்யவேண்டும் என்று பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம் வழக்கை வாபஸ் பெற அவருக்கு அனுமதியளித்துள்ளது. இந்நிலையில் தனது வெற்றியை எதிர்த்து வாக்காளர் ஒருவர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி கனிமொழி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.நடந்து முடிந்த 17 வது மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.அவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன விட 3.47 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.இந்நிலையில் கனிமொழி வெற்றியை எதிர்த்து தமிழிசை சவுந்தரராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், case against dmk mp kanimozhi victory by tuticorin voter

கனிமொழி தாக்கல் செய்த வேட்பு மனுவில் ஏராளமான குறைபாடுகள் உள்ளதாகவும்,  முறையற்ற வகையில் இந்த வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், வேட்புமனுக்கள் பரிசீலனையின் போது இந்த ஆட்சேபங்கள் தெரிவித்த போது, அதை தேர்தல் அதிகாரி நிராகரித்து விட்டதாக  தமிழிசை தனது மனுவில் குற்றம் சாட்டி உள்ளார். இந்த மனு மீதான விசாரணை நிலுவையில் இருக்கும்போது தமிழிசை சவுந்தர்ராஜன் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார்.இதையடுத்து, தான் தொடர்ந்த தேர்தல் வழக்கை வாபஸ் பெற அனுமதிகோரி அவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், வழக்கை வாபஸ் பெறுவது குறித்து அரசிதழில் வெளியிடுமாறு உயர் நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டார்.

case against dmk mp kanimozhi victory by tuticorin voter

வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு வாபஸ் தொடர்பாக அரசிதழில் வெளியிடப்பட்டதாக பதிவாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தேர்தல் வழக்கை வாபஸ் பெற தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு அனுமதியளித்தார். மேலும், வழக்கு வாபஸ் குறித்து தலா ஒரு தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய வேண்டும் என்றும் தமிழிசைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.இந்நிலையில், தூத்துக்குடி தேர்தலில் கனிமொழி வெற்றியை எதிர்த்து வாக்காளர் சந்தானகுமார் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி கனிமொழி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், இந்த வழக்கில் பதில் தருமாறு சந்தானகுமாருக்கு உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 30ம் தேதிக்கு தள்ளிவைத்தார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios