Asianet News TamilAsianet News Tamil

அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி.. அதிர்ச்சியில் உ.பி.க்கள்.!

கடந்த 2002-2006ஆம் ஆண்டில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புதுறை கடந்த 2006-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. 

Case against Anitha Radhakrishnan.. Chennai High Court takes action..
Author
Chennai, First Published Aug 5, 2022, 6:38 AM IST

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணையை தொடர சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 2002-2006ஆம் ஆண்டில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புதுறை கடந்த 2006-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கப் பிரிவு, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்களிடமும் விசாரணை நடத்தியது. மேலும், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 6 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகளை கடந்த பிப்ரவரி மாதம் முடக்கியது.

இதையும் படிங்க;- கையில் ஆவணமும் இல்லை.. மண்டையில் மூளையும் இல்லை.. அண்ணாமலைக்கு சரியான பதிலடி கொடுத்த செந்தில் பாலாஜி.!

Case against Anitha Radhakrishnan.. Chennai High Court takes action..

சொத்துகளை முடக்கியதற்கு எதிராகவும், தனக்கு எதிராக அமலாக்கப் பிரிவு பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரியும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அமலாக்கதுறை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

Case against Anitha Radhakrishnan.. Chennai High Court takes action..

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஜெகதீஷ் சந்திரா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தனக்கு எதிராக  லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும், அந்த வழக்கு இரண்டு வாரத்தில் விசாரணைக்கு வரவுள்ளதால் அதுவரை உயர் நீதிமன்றத்தில் உள்ள இந்த வழக்கைத் தள்ளி வைக்க வேண்டும் எனவும் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையும் படிங்க;- சொகுசு காரை வாங்கி சர்ச்சையில் சிக்கிய நேரு! விலை இத்தனை கோடியா? இந்த காரை யாரெல்லாம் வச்சிருக்காங்க தெரியுமா?

Case against Anitha Radhakrishnan.. Chennai High Court takes action..

அனிதா ராதாகிருஷ்ணனின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், செப்டம்பர் 9-ம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்திவைத்தனர். அதுவரை அமலாக்கப்பிரிவு விசாரிக்க விதித்த தடையை நீட்டிக்க முடியாது என்றும் அமலாக்கத்துறைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி வழக்கை விசாரிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios