சிவகங்கை அமமுக மாவட்ட செயலாளர் கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உமாதேவன் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 சிவகங்கை மாவட்டம் திருபத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அமமுக மாவட்ட செயலாளருமான கே.கே.உமாதேவன், நேற்று சிவகங்கையில் இருந்து திருப்பத்தூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். காரை ஓட்டுநர் ரமேஷ் ஓட்டிச் சென்றார். கார் திருக்கோஷ்டியூர் அருகே சென்ற போது திடீரென காரின் முன்பக்க டயர் வெடித்தது. பின்னர் சாலையில் தாறுமாறாக ஓடிய கார் பாலத்தில் மோதியது. 

இதில் மாவட்ட செயலாளர் உமாதேவனும், டிரைவர் ரமேசும் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனே மீட்டு காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து திருக்கோஷ்டியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து நடந்ததை அறிந்த அமமுக துணைச்பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் உடனே நேரில் சென்று நலம் விசாரித்தார்.