பிரதமர் மோடி தலைமையில் தன் மகனின் திருமணம் நடைபெற வேண்டுமென தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரும்புவதாப தகவல் வெளியாகி உள்ளது.   பிரதமரின் தேதியை பெற மத்திய அமைச்சர் ஒருவரின்  மூலம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும்  தகவல் வெளியாகியுள்ளது .  நடிகராக இருந்து அரசியல் கட்சி தொடங்கி எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து வரை உயர்ந்தவர் விஜயகாந்த் .  இவரது திருமணத்தை திமுக தலைவர் மு கருணாநிதி நடத்தி வைத்தார் அதேபோல் தன்னுடைய மகன் திருமணம் மோடி தலைமையில் நடக்க வேண்டுமென விஜயகாந்த் ஆசைப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதற்காக பாஜக தலைவர் மற்றும் மத்திய அமைச்சர் ஒருவர் மூலம் மோடியின்  தேதி கேட்க பிரேமலதா விஜயகாந்தும் ,  அவரது தம்பியுமான  எல்கே சுதிஷ்,  தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.   விஜயகாந்த்துக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் ,முதல் மகன் விஜய பிரபாகரன் ,  இரண்டாவது மகன்  சண்முக பாண்டியன் இவர் திரைப்படங்களில்  நடித்து வருகிறார் . மூத்த மகன் விஜய பிரபாகரன் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் ,  இவருக்கு திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டுள்ளது .  கோவையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரை மகளை அவர் கரம்பிடிக்க உள்ளார் .  கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நிச்சயதார்த்த வேலைகள் நடந்து வந்த நிலையில் விரைவில் திருமணம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது .  அவர் வீட்டில் நடக்கும் முதல் சுப நிகழ்ச்சி என்பதால் திருமண நிகழ்ச்சியை தொண்டர்கள் புடைசூழ வந்து ஆசீர்வதிக்கும்படி சிறப்பாக நடத்த விஜயகாந்த் விருப்பப்படுகிறார். 

எனவே தனது திருமணத்தை அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி நடத்தி வைத்தது போல ,  தனது மகன் திருமணத்தை தற்போதைய பிரதமர் மோடி தலைமையில் நடைபெற வேண்டும் என்பதற்காக   மத்திய அமைச்சர் ஒருவர் மூலம் அதற்கான பணிகளை மேற்கொண்டுவருகிறார் விஜயகாந்த்.   வழக்கமாக திருமண நிகழ்ச்சிகளுக்கு தேதி கொடுப்பதை பிரதமர் விரும்புவதில்லை ,  பாதுகாப்பு காரணங்களுக்காக அதை அவர் கவனமாக தவிர்த்து வரும் நிலையில் , விஜயகாந்த்  தன் மகன் திருமண நிகழ்விற்கு  பிரதமரின் தேதி பெற ஆர்வம் காட்டி வருகிறார்,  பிரதமர் இத்திருமணத்திற்கு தேதி கொடுக்கிறாரா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் .