Asianet News TamilAsianet News Tamil

என் மாமன் சுதீஷை தோற்கடிக்கணும்டா... கர்ஜித்த விஜயபிரபாகரன்..! கேப்டன் குடும்பத்தில் மீண்டும் குழப்பம்..!

விஜயகாந்தின் மச்சான் சுதீஷால் அக்குடும்பத்தினுள் பெரும் பஞ்சாயத்துகள் ஓடத் துவங்கியுள்ளனவாம். தன் அரசியல் குருவான அக்கா பிரேமலதாவை சுதீஷ் மதிப்பதே இல்லை! என்று அக்கா தரப்பும், தன்னை மட்டம்தட்டி உட்கார வைத்துவிட்டு மகனை அக்கா முன்னிலைப்படுத்துகிறார்! என்று தம்பி தரப்பும் பரஸ்பரம் பாய்ந்து கொண்டிருப்பதுதான் ஹைலைட்டே.

captain vijayakanth family Confusion
Author
Tamil Nadu, First Published Apr 9, 2019, 4:14 PM IST

’மீண்டும் கேப்டனின் சிங்கக் குரல்’ எனும் தலைப்போடு, பல முறை ரிகர்சல் பார்க்கப்பட்டு, வெட்டி ஒட்டி கட்டப்பட்ட விஜயகாந்தின் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக துவங்கியுள்ளது. உண்மையில் ஓரளவு விஜயகாந்தின் பேச்சில் முன்னேற்றம் தெரிகிறது! என்கிறார்கள் இந்த வீடியோவை பார்ப்பவர்கள்.

 captain vijayakanth family Confusion

இந்த சந்தோஷத்தை தே.மு.தி.க.வால் கொண்டாட முடியாத அளவுக்கு அந்த கட்சியின் தலைமை குடும்பத்தினுள் பிரச்னை வெடித்துள்ளது. ஆம், விஜயகாந்தின் மச்சான் சுதீஷால் அக்குடும்பத்தினுள் பெரும் பஞ்சாயத்துகள் ஓடத் துவங்கியுள்ளனவாம். தன் அரசியல் குருவான அக்கா பிரேமலதாவை சுதீஷ் மதிப்பதே இல்லை! என்று அக்கா தரப்பும், தன்னை மட்டம்தட்டி உட்கார வைத்துவிட்டு மகனை அக்கா முன்னிலைப்படுத்துகிறார்! என்று தம்பி தரப்பும் பரஸ்பரம் பாய்ந்து கொண்டிருப்பதுதான் ஹைலைட்டே. captain vijayakanth family Confusion

இந்த நிலையில், தன் அம்மாவை சுதீஷ் மதிப்பதேயில்லை எனும் கோபத்தில் சமீபத்தில் ‘என் மாமன் சுதீஷை கள்ளக்குறிச்சியில தோக்கடிக்கணும்டா!’ என்று தன் நண்பர்களிடமே கர்ஜித்து, சபதமே போட்டதாக ஒரு தகவல்  அக்கட்சியின்  முக்கிய வட்டத்தினுள் வைரலாகி இருக்கிறது. இது சுதீஷின் காதுகளுக்கும் போக, அவர் ‘அந்த சின்னப்பையனெல்லாம் என்னை  பேச வந்துட்டானா?’ என்று ஏக டென்ஷனாகி, தன் அக்காவின் கவனத்துக்கு விஷயத்தை கொண்டு போக, பிரேமலதாவோ கண்டுக்கவேயில்லையாம் தம்பியின் வருத்தத்தை. சரி அக்கா - தம்பிக்குள் அப்படி என்னதான் பிரச்னை? என கேட்டால் அந்த கட்சியினர் போடும் லிஸ்ட் இதுதான்.... captain vijayakanth family Confusion

* அ.தி.மு.க.வில் ஒரு ராஜ்யசபா சீட் வாங்கி, எம்.பி.யாக ஆசைப்பட்டார் பிரேமலதா. ஆனால் தி.மு.க.வுடனான சுதீஷின் பேச்சுவார்த்தை அம்பலமானதால் ஆளுங்கட்சி கைவிரித்துவிட்டது. இப்படி வெளிப்படையாக தி.மு.க.விடம் தம்பி பேசியதில் அவர் மீது ஏக டென்ஷன் பிரேமலதாவுக்கு. ‘புத்திசாலித்தனமில்லாம செஞ்சு எல்லாத்தையும் கெடுத்துட்ட.’ என்று பாய்ந்துவிட்டார் தம்பி மீது. 

* கள்ளக்குறிச்சி தொகுதியில் தான் போட்டியிடத்தான் பிரேமலதா நினைத்தார். ஆனால் சுதீஷோ பார்த்தசாரதி மற்றும் இளங்கோவன் ஆகியோரை அனுப்பி வைத்து வேட்பு மனுவுக்கான வேலையை செய்துவிட்டார். 

* அக்காவின் அனுமதி இல்லாமலே ராமதாஸிடம் ஓவராய் நெருக்கம் காட்டி பல டீலிங்குகளை சுதீஷ் பேசியதில் பிரேமாவுக்கு பெரும் கோபம். தன் கணவர் ட்ரீட்மெண்டில் இருக்கும் நிலையில், தன்னை பிரதானப்படுத்தாமல் தம்பி பைபாஸில் முன்னேறுவதை பிரேமாவால் ஏத்துக்க முடியலை. இதனால்தான் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்துக்கு அழைத்தபோது போக மறுத்துவிட்டார் விருந்துக்கு. 

* தன் மீது இருக்கும் கோபத்தில் பா.ம.க.வினரிடம் பிரேமலதா மோதல் போக்கு காட்டுவதால், தன் வெற்றி பாதிப்படைவதாக சுதீஷுக்கு பெரும் கோபம். இதனால் சொந்தக்காரர்களிடம் அக்கா ‘நான் ஜெயிக்க கூடாதுன்னு நினைக்கிறா அக்கா’ என்று பற்ற வைத்திருக்கிறார் சுதீஷ்.

* இது விஜயபிரபாகரனின் காதுகளுக்கு வர, ஏற்கனவே தன் அம்மாவை மாமன் மதிப்பதில்லை எனும் கடுப்பில் இருந்த பிரபாகரன் ‘ஆக்சுவலா அம்மா அப்படி நினைக்கலை. ஆனா அவராவே அவசரப்பட்டு கதை கட்டிவிட்டுட்டார். நாம அவர தோக்கடிச்சு, அதை நெஜமாக்கணும்டா’ என்று சபதமே போட்டுவிட்டார் ஆத்திரத்தில். 

* இது சுதீஷின் கவனத்துக்குப் போக, ஏற்கனவே தனக்குப் போட்டியாக விஜயபிரபாகரனை அக்கா வளர்த்துவிடுவதால் கடுப்பிலிருந்தவர் பிரபாகரனை திட்டித் தீர்த்துட்டார். இந்த தகவல் பிரேமலதா, விஜயபிரபாகரனின் காதுகளுக்கு போனதால் கள்ளக்குறிச்சுக்கு பிரசாரத்துக்கு போக மறுக்கிறாங்க. ஏற்கனவே கேப்டனின் உடல்நிலை பிரச்னையால் சரிஞ்சு கிடக்குற கட்சியின் செல்வாக்கை, இவங்களோட சண்டை சுத்தமா முடிச்சு, சங்கூதாம விடாது போல. ஹும் எங்க நிலைமைதான் கஷ்டம்.” என்று நிறுத்தினர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios