Captain in flight while travelling to Singapore

கேப்டனை கலர் டிரெஸ்ஸில் பார்த்து ரொம்ப நாளாச்சுல்ல!?...என்ற குறை ஒன்று இருந்தது. ஆனால் சிங்கப்பூர் ஃபிளைட்டில் சிக்கென ஒரு போட்டோவுக்கு போஸ் கொடுத்து அதை போக்கியிருக்கிறார் விஜயகாந்த்!

கேப்டன் என்னதான் அம்புட்டு கறுப்பாக இருந்தாலும் கூட சினிமாக்களில் அவரது காஸ்டியூமெல்லாம் தாறுமாறு கலஃபுல்லாக காட்சியளிக்கும். அதிலும் பட்டிக்காட்டு வேடமேற்று அதில் பாட்டு சீன் வேறு வந்துவிட்டால் போதும், தலைவரிடம் ராமராஜெனெல்லாம் பிச்சை எடுக்க வேண்டும். பளீர் பச்சையில், பொளேர் ரோஸ் கலரில், தொட்டாலே தோலுரியும் ஊதா கலரில் இப்படி கண்ணை புடுங்கி திங்குமளவுக்கு கெட்ட கலர்ஃபுல் காஸ்ட்யூம்களில் காட்சியளிப்பார். 

ஆனால் அரசியலுக்கு வந்த பின் வெள்ளையுஞ்சொள்ளையுமாவே கேப்டன் திரிவதால் அவரது ரசிக மற்றும் தொண்டர் பயபுள்ளைக போரடிச்சு கெடந்தாக. இந்த வாட்டத்தை போக்கும் வகையில் நேற்று ஒரு ஸ்டில்லை தட்டியிருக்கிறது விஜயகாந்தின் வட்டாரம். 

சிங்கப்பூர் ஃப்ளைட்டில் நம்ம கேப்டன்..எனும் ஃபுட்நோட்டுடன் இருக்கும் அந்த படத்தில், ‘ஏ புள்ள! மாமன் வந்துட்டம்ல! டூயட்ட ஆராம்பிக்கலாமா ஆங்!’ என்று கேட்குமளவுக்கு செம்ம்ம யூத் காஸ்டியூமில் இருக்கிறார். கட்டம் போட்ட சட்டை, ஜீன்ஸ், கேப்டனின் ஆல்டைம் ஃபேவரைட்டான கேன்வாஸ் என்று தலைவர் தனி கெத்து காட்டுகிறார். 

ஃப்ளைட்டில் விண்டோ சீட்டில் உட்காராமல், தனித்து இந்தப்பக்கம் உட்கார்ந்திருக்கும் கேப்டனின் மடியில் ஒரு பில்லோ கண் சிமிட்டுகிறது. எத்தனை ஹீரோயின்களை தழுவி கொஞ்சிய மடி அது! 
இதையெல்லாம் விட மாஸ் கேப்டனின் கையில் ‘ஃபிலிம் ஃபேர்’ புக் டாலடிக்கிறது. ’தம்பி, எங்களுக்கும் இங்கிலீசு தெரியும்.’ என்று டக்கராய் பஞ்சடிப்பது போல் ஒரு லுக் ஒன்று விடுகிறார் பாருங்கள்! அவரைப்பார்த்து ‘நீ இன்னும் யூத் யா’ என்று வெறித்தனமாய் சொல்ல வைக்கிறது ரசிகனை. அரசியல் அந்தப்பக்கம் கெடக்கட்டும் கேப்டன். நீங்க மறுபடியும் சினிமாவுக்கு வாங்க! என்று அழைக்கலாம் போலிருக்கிறது. 

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், கேப்டனை இப்படியொரு போட்டோ எடுத்து அவரது டீம் போடக் காரணமே!...’விஜயகாந்துக்கு உடல்நிலை பாதிப்பு! திடீர் சிங்கப்பூர் பயணம்.’ என்று ஒரு டீம் கிளப்பிவிட்டதால்தானாம். பிரேமலதாவின் உத்தரவின்படியே இந்த ஸ்பெஷல் போட்டோ! என்கிறார்கள். ஆனால் இன்னும் விபரமறிந்தவர்களோ, அந்த போட்டோவை கிளிக்கியதே பிரேமலதாதான் என்கிறார்கள். 
எது எப்படியோ, கேப்டன் இஸ் பேக்!