Asianet News TamilAsianet News Tamil

பால்வாடி முன் போராட்டமாம்... அண்ணாமலையை எதிர்கொள்ள முடியாமல் திணறலா..? அதுக்காக இப்படியா செய்வீங்க..?

மோடி அவர்களை கிண்டல் செய்த குழந்தைகளை கண்டித்து தமிழ் நாடு முழுவதிலும் உள்ள பால்வாடிகள் முன் போராட்டம் நடத்துவோம்

cant face Annamalai Can you do this for that ..?
Author
Tamil Nadu, First Published Jan 17, 2022, 10:50 AM IST


தமிழில் ஒளிபரப்பாகும் முக்கியமான பொழுதுபோக்கு சேனலில் குழந்தைகள் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பானது. அதில், புலிகேசி மன்னர் போன்ற வேடத்தில் ஒரு குழந்தையும், மங்குனி அமைச்சர் வேடத்தில் ஒரு குழந்தையும் நடித்திருந்தது.

அந்த இரண்டு குழந்தைகளும் பிரதமர் மோடியின் கருப்பு பண நடவடிக்கை, பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வது உள்ளிட்ட நிகழ்வுகளை விமர்சித்து வசனங்களை பேசியிருந்தன. இந்த காட்சிகள் நேற்றிலிருந்து இணையத்தில் வைரலானது. பா.ஜ.க எதிர்ப்பு மனநிலை கொண்ட நெட்டிசன்கள் இந்த வீடியோவை பரவலாக பகிர்ந்து ட்ரெண்ட் செய்தனர். இந்தநிலையில், இந்த சேனல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.cant face Annamalai Can you do this for that ..?

தமிழில் ஒளிபரப்பாகும் முக்கியமான பொழுதுபோக்கு சேனலில் குழந்தைகள் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பானது. அதில், புலிகேசி மன்னர் போன்ற வேடத்தில் ஒரு குழந்தையும், மங்குனி அமைச்சர் வேடத்தில் ஒரு குழந்தையும் நடித்திருந்தது.

அந்த இரண்டு குழந்தைகளும் பிரதமர் மோடியின் கருப்பு பண நடவடிக்கை, பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வது உள்ளிட்ட நிகழ்வுகளை விமர்சித்து வசனங்களை பேசியிருந்தன. இந்த காட்சிகள் நேற்றிலிருந்து இணையத்தில் வைரலானது. பா.ஜ.க எதிர்ப்பு மனநிலை கொண்ட நெட்டிசன்கள் இந்த வீடியோவை பரவலாக பகிர்ந்து ட்ரெண்ட் செய்தனர். இந்தநிலையில், இந்த சேனல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

 

இந்நிலையில், அண்ணாமலை குறிப்பிட்டதாக ‘’ பிரதமர் மோடி அவர்களை கிண்டல் செய்த குழந்தைகளை கண்டித்து தமிழ் நாடு முழுவதிலும் உள்ள பால்வாடிகள் முன் போராட்டம் நடத்துவோம் என அண்ணாமலை கூறியதாக ஒரு தனியார் இணையதள செய்தி நிறுவனத்தின் லோகோ பொறுந்திய கார்டு வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. 

அதே ப்ல்ல்ல் மற்றொரு இணைய நிறுவனத்தின் கார்டில், நம்மை அடிமைப்படுத்திய பிரிட்டிஷ் அதிகாரிக்கு சிலை வைக்கிறது திமுக அரசு. சிலை வைக்கும் அளவுக்கு பென்னி குயிக் இந்துகளுக்கு செய்த நன்மை என அண்ணாமலை கேள்வி எழுப்பியதாக இரு கார்டும் வெளியாகி இருக்கிறது. 

அடுத்து தனியார் நாளிதழ் லோகோ தாங்கிய கார்டில், ‘’ தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாரதப்பிரதமர் மோடியின் மாண்பை குலைக்கும் விதமாக பேசிய விவகாரம். பங்குபெற்ற குழந்தைகள், அதைப்பார்த்து சிரித்த நடிகை சினேகா, நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஆகிய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அண்ணாமலை கூறியதாக த்கவல் தந்தி அடிக்கிறது. 

 

மற்றொரு கார்டில், பாரத பிரதமர் மோட்ஜியை கிண்டல் செய்தால் அந்த சேனல் இருக்காது. சபரி மலையில் கொதித்த அண்ணாமலை போன்ற கார்டுகள் இணையத்தை கலக்கி கொண்டிருக்கின்றன. ஆனால், அந்த கார்டில் சொன்னது அண்ணாமலை இல்லை. அவர் அப்படி எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. லோகோ பொறுந்திய நிறுவனத்தின் கார்டே இல்லை. அவை அனைத்தும் போலியாக உருவாக்கப்பட்டுள்ள கார்டுகள் என்கிற உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பிறகு யார் இப்படி செய்வது? அண்ணாமலையின் ஆளுமையை எதிர் கொள்ள முடியாமல் திணறும் திமுக ஐடி செல் மூலம் பொய் செய்திகளை பரப்பிவருகிறது என தமிழக பாஜக குற்றாம்சாட்டியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios