cant conduct local body elections til feb 2018 said state government in high court
வரும் 2018 பிப்ரவரி வரையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தொகுதி, வார்டு மறுவரையறை நடைபெறுவதால் தேர்தல் நடத்துவது கடினம் என்று தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் கூறியுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலை, 15 நாட்களுக்குள் நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி கே.கே.ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். ஏற்கெனவே உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தி.மு.க., ஒரு வழக்கைத் தாக்கல் செய்துள்ளது. இந்த இரண்டு வழக்கும் சேர்க்கப்பட்டு விசாரிக்கப்பட்டது.
இந்த வழக்கு நவ. 6 இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழகத்தில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நடந்து வரும் தொகுதி வரையறை பணி, வரும் 2018 பிப்ரவரி மாதம் வரை நடைபெறும். எனவே அதுவரை உள்ளாட்சித் தேர்தலை நடத்த வாய்ப்பு இல்லை என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஏற்கெனவே இரட்டை இலை குறித்த வழக்கு தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வரும் நிலையில் அதுவரை உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவது சந்தேகம் தான் என ஏற்கெனவே ஒரு கருத்து நிலவி வருகிறது குறிப்பிடத் தக்கது.
