வேலூரில் இருக்கும் விஐடி பல்கலைக்கழகத்தில் 34வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர் தமிழக - கர்நாடகா மாநிலங்களில் தண்ணீர் பிரச்னையை தீர்க்க அவர் தீவிர முயற்சிகள் மேற்கொண்டதாகவும் ஆனால் முடியவில்லை என்றார். எனினும் என்றாவது ஒருநாள் தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். தான் ஒரு விவசாய குடும்பத்தைச் சார்ந்தவன் என்று குறிப்பிட்ட நிதின் கட்கரி, அவருடைய சொந்த மாநிலமான மஹாராஷ்டிராவில் 10 ஆயிரம் விவசாய சங்கங்கள் இருப்பதாக கூறினார்.

மாற்று எரிபொருளை கண்டுப்பிடிப்பதை ஆர்வம் காட்ட வேண்டும் என்றும் விவசாயத்தில் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் நவீன தொழில்நுட்பத்தை புகுத்தினால் அதிசயங்களை உண்டாக்கலாம் என்று தெரிவித்தார்.

மேலும் வீணாக கடலில் கலக்கும் மழைநீரை தடுத்து ஆக்கபூர்வ பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.