அந்நிய செலாவணி மோசடி வழக்கான ஃபெரா வழக்கில் கடந்த 5-ம் தேதி எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் சுயேச்சை MLA தினகரன் ஆஜராகி வந்த  தினகரன் பயங்கரமான அப்செட்டில் இருக்கிறாராம்.

கடந்த 96-97 ஆண்டுகளில், சரியான ஆவணங்கள் சமர்ப்பிக்காமல் வெளிநாட்டில் சட்டவிரோதமாக பணம் பரிவர்த்தனை செய்ததாக அமலாக்கப்பிரிவினர் சசிகலா, தினகரன், பாஸ்கரன் ஆகிய மூவர் மீதும் ஃபெரா வழக்கைப் போட்டது. சுமார் 18 வருடங்களுக்குப் வஹ்ழ்க்கை நடத்திய எழும்பூர் நீதிமன்றம் 2015-ல் வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று விடுதலை செய்தது.எழும்பூர் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தனர் அமலாக்கப்பிரிவினர். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிசொக்கலிங்கம் எழும்பூர் கோர்ட் தீர்ப்பை ரத்துசெய்து வழக்கை மீண்டும் நடத்த உத்தரவிட்டார்.

தற்போது எழும்பூர் கோர்ட்டில் ஃபெரா வழக்கு நடைபெற்றுவருகிறது. கடந்த ஏப்ரல் 5-ம் தேதி 10.30 மணிக்குக் கோர்ட்டில் ஆஜரானதும் நீதிபதி மலர்மதி, சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை செய்யவேண்டும் என்று கூறியிருக்கிறார். அதற்கு தினகரன் தரப்பு வழக்கறிஞர்கள் அவகாசம் கேட்டிருக்கிறார்கள்.
இதில் அதிருப்தியான நீதிபதி காலை 11.15 மணிக்கு ஒத்தி வைத்தார். அப்போது மீண்டும் தினகரன் தரப்பு வழக்கறிஞர்கள், சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை செய்வதற்கு தங்களுக்கு சில நாட்கள் அவகாசம் தரவேண்டும் என்று வாதாடினார்கள். 12.30 மணி வரை நடந்து.

இந்த ஒருமணி நேரமும் தினகரன் நீதிமன்றத்தில் நின்றுகொண்டே இருந்தார். நீதிபதி தினகரனைப் பார்த்து அடுக்கடுக்காக கேள்விகளால் தினரடிதுள்ளார். அப்போது, ‘அக்யூஸ்டு வழக்கை இழுத்தடிக்க முயற்சிக்கிறார்’ என்று குறிப்பிட்டார் நீதிபதி. மேலும் வார்த்தைக்கு வார்த்தை அக்யூஸ்டு என்ற வார்த்தையை போன்படுத்தியுள்ளார் நீதிபதி. சுமார் 20 முறை அக்யூஸ்டு என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதால் டென்ஷனாகிவிட்டாராம் தினகரன்.வழக்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்து காரில் ஏறிய தினகரன், தனது வழக்கறிஞர்களுடன் ஃபெரா வழக்கு பற்றி சீரியசாக விவாதித்திருக்கிறார்.

‘அரசியல் ரீதியாக நம்மை வீழ்த்த முடியாதவர்கள், இந்த வழக்கை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். நீதிபதியும் சொல்லி வைத்ததைப்போல அக்யூஸ்டு... அக்யூஸ்டு... என பலமுறை சொல்லிச் சொல்லியே கோபத்தை உண்டாக்குகிறார். இது கொஞ்சம் சந்தேகமாக இருக்கு  அதனால் கவனமாக வழக்கு கையாளுங்க என தனது வழக்கறிஞர்களை வற்புறுத்தியிருக்கிறாராம் தினகரன்.