Asianet News TamilAsianet News Tamil

ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்தப்படும்... தமிழக அரசு அறிவிப்பு.!

கொரோனா காரணமாக தமிழகத்தில் ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரியர் தேர்வுகளை 8 வாரத்தில் நடத்தி முடிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 

Canceled Ariyar exams will be conducted online ... Government of Tamil Nadu announcement.!
Author
Tamil Nadu, First Published Apr 15, 2021, 12:07 PM IST

கொரோனா காரணமாக தமிழகத்தில் ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரியர் தேர்வுகளை 8 வாரத்தில் நடத்தி முடிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது வரை ஓய்ந்தபாடில்லை. கொரோனா பரவலால் தேர்வுகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக, அரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் கல்வியாளர்கள் மத்தியில் எதிர்ப்பை கிளப்பியது. இது மாணவர்களின் கல்வியை சீர்குலைக்கும் என அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது

.Canceled Ariyar exams will be conducted online ... Government of Tamil Nadu announcement.!

அரியர் தேர்ச்சயை எதிர்த்து ண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள் பாலகுருசாமி மற்றும் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அண்மையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அரியர் தேர்ச்சியை ஏற்க முடியாது என நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர். தேர்வுகளை நடத்துவது பற்றி பரிசீலிக்க வேண்டுமென்றும் அரசுக்கு அறிவுறுத்தினர்.

Canceled Ariyar exams will be conducted online ... Government of Tamil Nadu announcement.!

இந்த நிலையில், இன்று மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க மாட்டோம் என்றும் கல்லூரி மாணவர்களுக்கு அரியர் தேர்வுகள் மே 17ம் தேதி முதல் ஆன்லைனில் நடத்தப்படும் என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையேற்றுக் கொண்ட நீதிபதிகள், 8 வாரத்தில் ஆன்லைனில் தேர்வுகளை நடத்தி முடிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு விட்டதாக குஷியில் இருந்த மாணவர்கள், அரசின் இந்த அறிவிப்பால் தற்போது அதிர்ந்து போயுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios