Asianet News TamilAsianet News Tamil

பெண் பாதுகாப்பு பற்றி கமல் பேசலாமா? மய்யம் நாயகனை புரட்டி எடுக்கும் அ.தி.மு.க. இணையதள அணி!!!

கசாப்பு கடைக்காரன் வள்ளலார் சித்தாந்தத்தை பேசுவது போல் இருக்கிறது, கமல்ஹாசன் பெண்கள் பாதுகாப்பு பற்றி வாய் திறப்பது!’ நெடு நாட்களுக்குப் பின் நெத்தியடியான விமர்சனத்தை அடர்த்தியாக அள்ளிக் கொட்ட துவங்கியுள்ளது அ.தி.மு.க.வின் இணையதள அணி. 

Can you talk about kamal female protection? AIADMK question
Author
Chennai, First Published Oct 17, 2018, 1:39 PM IST

’கசாப்பு கடைக்காரன் வள்ளலார் சித்தாந்தத்தை பேசுவது போல் இருக்கிறது, கமல்ஹாசன் பெண்கள் பாதுகாப்பு பற்றி வாய் திறப்பது!’ நெடு நாட்களுக்குப் பின் நெத்தியடியான விமர்சனத்தை அடர்த்தியாக அள்ளிக் கொட்ட துவங்கியுள்ளது அ.தி.மு.க.வின் இணையதள அணி. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், பெண்கள் பாதுகாப்புக்காக  வடிவமைக்கப்பட்டுள்ள  ‘ரெளத்திரம்’ எனும் செயலியை நேற்று சென்னையில் அறிமுகப்படுத்தினார். பின் நிருபர்களிடம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட அ.தி.மு.க.வினரை வறுத்தெடுத்துவிட்டு கிளம்பினார். Can you talk about kamal female protection? AIADMK question

இந்நிலையில் அ.தி.மு.க.வின் இணைய அணியினர் கமல்ஹாசனை மிக கடுமையாக விமர்சித்து நேற்று முதல் இணையதளத்தில் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர். தங்களின் அதிகாரப்பூர்வ தளத்தில் இல்லாமல் தனித்தனியாக தங்களின் தனிப்பட்ட தளங்களில் இதை பதிவு செய்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாகவே தினகரன் மற்றும் ஸ்டாலினை திட்டித்தீர்த்து சம்பிரதாய அரசியல் பேசி வந்த அவர்களின் பதிவுகள் இப்போது கமல் விஷயத்தில் மிக கூராகவும், அடர்த்தியாகவும் கருத்துக்களை முன் வைத்திருக்கின்றன. Can you talk about kamal female protection? AIADMK question

அதன் ஹைலைட் தொகுப்பு இதோ...

*  பெண் பாதுகாப்பை பற்றி கமல் நீங்கள் பேசுகையில் உங்கள் நாக்கு அசிங்கப்படவில்லையா? சினிமாவில் உங்களின் தேர்ந்த வேஷங்களை ‘வாழ்ந்திருக்கான்யா மனுஷன்’ என்று நம்பும் ரசிக கூட்டம் போல், அரசியலில் உங்களின் இந்த ‘பெண் பாதுகாப்பு போராளி’ வேஷத்தை தமிழ் மக்கள் நம்புவர் என்ரு நினைத்தீரா?

* கை பிடித்த மனைவியை கஷ்டமோ, நஷ்டமோ, மோதலோ, காதலோ கடைசி வரை காப்பாற்றுபவன் தான் மனிதன், ரியல் ஆண். ஆனால் உம்மால் நட்டாற்றில் வாணி கணபதி விடப்பட்டது ஏன்?

* முதல் திருமணம் பிரிவில் முடிந்து, விவாகரத்தாகி இரண்டாம் திருமணமென்பது கூட தமிழகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டதுதான். அதுவும் ஊரறிய விவாகரத்து செய்துவிட்டு அதே ஊரறிய மற்றொர் பெண்ணை மறுமணம் செய்பவன் தான் யோக்கியன். நீர் அப்படி செய்தீரா? எந்த அடிப்படையில் சரிகாவுடன் வாழ்வை துவக்கினீர்?

* கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக தமிழர்கள் வாழ்க்கையில் லேசுபாசாக புகுந்திருக்கும் ‘லிவ்விங் டூகெதர்’ விஷயத்தை இருபது வருடங்களுக்கெல்லாம் முன்னதாகவே அறிமுகப்படுத்தியதோடு, தாலி கட்டாமலே குழந்தைகள் பெறுவேன், எவன் கேட்பது? என்று சரிகா வழியாக ஸ்ருதி, அக்‌ஷரா எனும் இரு பெண் குழந்தைகளை பெற்றீர்! அதன் பின் சிவாஜி எனும் பெரிய மனிதர் இடித்துச் சொன்னதால் சரிகாவுக்கு தாலி கட்டினீர்!

* சரி சரிகாவோடு சேர்ந்து வாழ்ந்தீரா? என்றால் அதுவும் இல்லை. தாலியின்றி பெற்ற குழந்தைகள் வயசுக்கு வந்த காலத்தில் அவரது அம்மாவை  பிரிந்தீர். தாங்கள் படிக்கும் பள்ளி ஆண்டுவிழாவுக்கு  நீங்கள் பெற்ற குழந்தைகள் தன் அப்பா - அம்மாவோடு போய் நிற்கும் அடிப்படை பாதுகாப்பு தன்மையை கூட வழங்காத நீர் இன்று பெண் பாதுகாப்பு செயலியை அறிமுகப்படுத்துகிறீர்! அசிங்கம், வெட்கம், அவமானம். 

* சரி சிம்ரன் கதை என்னவாயிற்று? தமிழ் சினிமாவின் நட்சத்திரங்கள் கலை விழாவுக்காக கடல் கடந்து சென்று, நடசத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தீர்கள். அங்கே சிம்ரனை நீங்கள் கெஞ்சி கூத்தாடியதையும், உங்கள் உடைமை பைகளை அள்ளி அறைக்கு வெளியே வீசியதையும் சக நட்சத்திரங்கள் பார்த்து சிரித்தது நினைவில் இருக்கிறதா? சில சினிமா பி.ஆர்.ஓ.க்களின் வழியாக இந்த விவகாரம் தேசம் முழுவதும் பரவியதும் நினைவிருக்கிறதா! உங்களால் எந்தவிதமான அச்சுறுத்தல் வந்ததால் சிம்ரன் அப்படி வீசினார்? நீர் பெண் பாதுகாப்பு பற்றி பேசுகிறீரா?

* சரி, இளமை மிடுக்கிலும், நடுத்தர வயது தாண்டியும் கிளர்ச்சியாக இருக்கிறோமே என்று ஆடினீர். ஐம்பதை கடந்த பின்னும் கவுதமியோடு ஏன் சில காலம் சேர்ந்து வாழ்ந்தீர். உங்களுக்குள் ‘உறவு’ இருக்கிறது என்று உலகறிய டி.வி. பேட்டியில் சொன்னீர். இப்போது அந்த கவுதமி நிலை என்னாயிற்று? புற்றுநோயில்  இருந்து மீண்டு, உம்மை நம்பி வந்து, அறுபட்ட தன் உடலையும் உமக்காக பகிர்ந்து கொண்ட பெண்ணை விலக்கி வைத்துவிட்டீர். அந்த கவுதமிக்கும் வயதுக்கு வந்த மகள் சுப்பு இருக்கிறார்! இவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய கேலிச் சின்னம் நீர். 

* அட இதையெல்லாம் விடுமய்யா! ஏதோ அறியாமல், தெரியாமல் மாராப்பு விலகுவதென்பதை மானமிழப்பதற்கு சமமாக நினைக்கும் மண் இது. இப்படிப்பட்ட மண்ணில் சரிகா பெற்றெடுத்த மகள்களை அங்கம் தெரியும் வண்ணம் அணைத்தபடி நின்று  போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறீர். மகள்களுக்கு நீர் தரும் பாதுகாப்பு இதுதானா?

* நீர் ஹீரோவாக நடிக்க துவங்கிய காலத்திலிருந்து இப்போது நடித்து முடித்திருக்கும் படம் வரையில் உமது எந்தப் படத்தையாவது குடும்பத்தோடு உட்கார்ந்து கூச்சமில்லாமல் பார்க்க முடியுமா?  நாயகிகளை ஆடையை கழற்ற வைத்து, கழற்ற வைத்தே நடிக்க வைத்து பழக்கப்பட்ட நீர்  பெண் பாதுகாப்பு பற்றி பேசுவதா? நம் சினிமாவை வயது வந்த பெண் பிள்ளைகளும், சிறுமிகளும் பார்க்க நேருமே! என்று கொஞ்சமும் சிந்திக்காமல், வெறும் ஜட்டியோடும், கோவணத்தோடும் நின்று நடிக்க துளியும் தயங்காத நீர் பெண் பாதுகாப்பு பற்றி பேசுவதா?

* அவ்வை சண்முகி படத்தில் மடிசார் பெண் ஆடையில் மிக அலங்கோலமாக நடித்து ஒட்டுமொத்தமாக ஒரு சமூக பெண்களை அசிங்கப்படுத்தியதோடு, அதன் இறுதி காட்சியில் பிளவுசை கிழித்து மார்பை காட்டுவதாய் நடித்திருப்பீரே! நீரெல்லாம் பெண் பாதுகாப்புக்கு குரல் கொடுப்பது பற்றி வாய் திறப்பதென்ன, நினைக்கவும் கூடாது. உமது படங்களைப் பார்த்து ஈவ் டீஸிங் கில்லாடிகளாக மாறிய ஆண்கள் எண்ணிக்கை ஆயிரமாயிரம், அதனால் அசிங்கப்பட்ட பெண்கள் லட்சோப லட்சம். 

* இன்னும் இறங்கிப் பேசிட எங்களுக்கு தெரியும், உன் கதாநாயக வாழ்க்கையில் நீர்  புரட்டி எடுத்த நாயகிகளின் பட்டியலும் தமிழனுக்குப் புரியும். 
இனியும் பண்பாடு பற்றி வகுப்பெடுப்பீர் என்றால், கண்ணாடி முன் நின்று உம்மை நீயே கேட்டுக் கொள்ளும், ‘நான் நல்லவனா?’ என்று. உன் மனசாட்சி ஆம்! என்று சொன்னால் அதன் பிறகும் வாய் திறக்கவும்.

Follow Us:
Download App:
  • android
  • ios