Asianet News TamilAsianet News Tamil

அதிமுக செய்த தவறை விமர்சித்த திமுக அதையே செய்யலாமா..? மு.க. ஸ்டாலின் செயலுக்கு கொந்தளிக்கும் டாக்டர் ராமதாஸ்!

டாஸ்மாக் திறக்கும் விவகாரத்தில் கடந்த ஆட்சியில் இத்தகைய போக்கை விமர்சித்த திமுக இப்போது அதே தவறை செய்யலாமா என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

Can the DMK, which criticized the mistake made by the AIADMK, do the same? Dr.Ramadoss attacked dmk
Author
Chennai, First Published Jun 11, 2021, 8:06 PM IST

தமிழகத்தில் வரும் திங்கள் கிழமை முதல் ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு பகுதியாக தமிழகத்தில் கொரோனா  தொற்று பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகளைத் திறக்கவும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.Can the DMK, which criticized the mistake made by the AIADMK, do the same? Dr.Ramadoss attacked dmk
இதுதொடர்பாக ட்விட்டரில் ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில், “ஊரடங்கு தளர்வுகளின் ஒரு கட்டமாக தமிழ்நாட்டில் மதுக்கடைகளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது. மக்கள் நலனுக்கு எதிரான இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது. ஒருபுறம் கொரோனா நிவாரண நிதியாக ரூ.2000 வழங்கிவிட்டு, மறுபுறம் அதை பறிக்கும் நோக்குடன் மதுக்கடைகளை திறப்பது எந்த வகையில் நியாயம்? கடந்த ஆட்சியில் இத்தகைய போக்கை விமர்சித்த திமுக இப்போது அதே தவறை செய்யலாமா? ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லையே!Can the DMK, which criticized the mistake made by the AIADMK, do the same? Dr.Ramadoss attacked dmk
மதுக்கடைகள் திறக்கப்பட்டால் ஏழைக் குடும்பங்களுக்கு கிடைக்கும் மிகக் குறைந்த வருமானமும் பறிபோய்விடும். குடும்பங்களில் வறுமை அதிகரிக்கும்; வன்கொடுமை பெருகும். இவற்றைத் தடுக்க தமிழ்நாட்டில் மதுக்கடைகளை திறக்கக் கூடாது; மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்!” என்று டாக்டர் ராமதாஸ் பதிவிட்டுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios