துபாயிலிருந்து சென்னை வந்த ஏா்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.19 லட்சம் மதிப்புடைய 372 கிராம் தங்கம்  பறிமுதல் செய்யப்பட்டது. அதில்  இருவர் கைது செய்யப்பட்டனர்.  

சென்னை பன்னாட்டு விமானநிலையத்திற்கு நேற்று இரவு ஏா்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அதில் வந்த 86  பயணிகளையும் சுங்கத்துறையினா் சோதணையிட்டனா். அதில் சென்னையை சோ்ந்த 2 பயணிகள், தங்களிடம் சுங்கத்தீா்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறிவிட்டு, அவசரமாக கிரீன் சேனல் வழியாக வெளியே சென்றனா். 

அவா்களின் இயல்புக்கு மாறான நடவடிக்கை சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து இ-பாஸ் கவுண்டரில் வரிசையில் நின்ற இருவரையும் மீண்டும் சுங்கத்துறை  அதிகாரிகள் அலுவலகம் அழைத்து வந்து சோதணையிட்டனா். அப்போது அவா்களின் உள்ளாடைக்குள் பிளாஸ்டிக் டப்பிகளில் மறைத்து வைத்திருந்த 375 கிராம் தங்கக் கட்டிகளை கைப்பற்றினா். 

அதன் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும், இதையடுத்து இருவரையும்  சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்துகின்றனா். கொரோனா நெருக்கடி நேரத்தில் சட்டத்திற்கு புறம்பாக பயணிகள் கடத்தலில் ஈடுபட்டு கைதாகிய சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.