Can not win the election with a double leaf?
எடப்பாடி-பன்னீர் அணிக்கு இரட்டை இலை ஒதுக்கப்பட்டதை அடுத்து, ஜெ.தீபாவின் கணவர் மாதவன், முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் வாழ்த்து கூறியுள்ளார்.
அதிமுகவில் உறுப்பினரே இல்லாத ஜெ.தீபா இரட்டை இலை வழக்கில் இணைந்துள்ளார். கட்சி உறுப்பினராக இல்லாத ஜெ.தீபாவின் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக இரண்டாக பிரிந்ததால் இரட்டை இலை சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டது.

இதையடுத்து சசிகலா அணியும் ஒபிஎஸ் அணியும் தங்களுக்கே கட்சியும் சின்னமும் சொந்தம் என்று தேர்தல் ஆணையத்தில் பிரமான பத்திரங்கள் தாக்கல் செய்தனர். இதனிடையே ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா பெரும்பான்மையான அதிமுகவினர் தனக்கே ஆதரவு தெரிவிப்பதாகவும் எங்களுக்கே சின்னத்தை ஒதுக்க வேண்டும் எனவும் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தார். ஆனால் சின்னம் யாருக்கும் ஒதுக்கப்படவில்லை.
அச்சமயம், சசிகலா தரப்பில் பெரும்பான்மையான எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆனால் ஒபிஎஸ்-க்கு 12 எம்.எல்.ஏக்களே ஆதரவு தெரிவித்தனர். அதிமுகவின் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் அணி மற்றும் தினகரன் அணி ஆகியோரிடம் ஏழு கட்டங்களாக விசாரணையை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதாவது இரட்டை இலை சின்னமும் கட்சியும் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிக்கே என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது.
இரட்டை இலை சின்னம், தங்களுக்கு கிடைக்கும் என்று கூறி வந்த டிடிவி தினகரன் அணி தரப்பு தற்போது மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளது. குரங்கு கையில் பூமாலை சிக்கியதுபோல் எடப்பாடி-பன்னீர் தரப்பினரிடையே இரட்டை இலை சிக்கியுள்ளது என்றும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து சட்டப்படி மீட்டெடுப்போம் என்று டிடிவி தினகரன் இன்று கூறியிருந்தார்.
ஆனால் அதிமுகவில் உறுப்பினரே இல்லாத ஜெ.தீபா இரட்டை இலை வழக்கில் இணைந்தார். கட்சி உறுப்பினராக இல்லாத ஜெ.தீபாவின் வழக்கு தள்ளுபடி செய்யதது தேர்தல் ஆணையம்.
இந்த நிலையில், இரட்டை இலையை மீட்டெடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஜெ.தீபாவின் கணவர் மாதவன் வாழ்த்து கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் இரட்டை இலை சின்னத்தை வைத்தே தேர்தலில் வெற்றிபெற முடியாது என்றும் மாதவன் கூறியுள்ளார்.
