ஆளுநரை மரியாதையுடன் அழைக்க இனி மாண்புமிகு ஆளுநர் என்றே அழைக்க வேண்டும் என ஆளுநர் மாளிகை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Add Asianetnews Tamil as a Preferred Source

தமிழக அரசுக்கு (பொறுப்பு) ஆளுநர் வித்தியாசாகர ராவ் புதியதாக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். அதாவது தமிழக ஆளுநரை இனி மாண்புமிகு ஆளுநர் என்றே அழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழக அரசு இனிமேல் மேதகு ஆளுநர் என்று பயன்படுத்தக்கூடாது. அதற்கு பதிலாக மாண்புமிகு ஆளுநர் என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.

தற்போது பயன்பாட்டில் உள்ள மேதகு ஆளுநர் என்ற சொல் இன்று முதல் நீக்கப்படுவதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. மாண்புமிகு என்ற வார்த்தை இன்று முதல் பயன்பாட்டிற்கு வருகின்றது.
இவ்வாறு ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
