டந்த திங்கள்கிழமை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவராக, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அரசு கேபிள் டிவி நிறுவன தலைவராக சென்னை எழும்பூரில் உள்ள அலுவலகத்தில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றுக்கொண்டார்.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் பொறுப்பை ஏற்கனவே தகவல் தொழில்நுட்பவியல் துறை முதன்மைச் செயலர் சந்தோஷ் பாபு கவனித்து வந்தார். அவரிடம் உள்ள இந்தப் பொறுப்பு தற்போது அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனிடம் அளிக்கப்பட்டுள்ளது. 

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் அரசு கேபிள் கட்டணத்தை குறைக்க முதலமைச்சர் எடப்பாடியிடம் விவாதித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

உடுமலை ராதாகிருஷ்ணன் ஏற்கெனவே கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் (2011-16) அவர் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவராக பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.