நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி என இரண்டு தொகுதிகளிலும் நேற்று இடைத் தேத்ல் நடைபெற்றது. இதில் இரண்டு தொகுதிகளிலுமே அதிமுக போட்டியிட்டது. திமுக கூட்டணியில் விக்கிரவாண்டியில் திமுகவும், நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிட்டன.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற தேர்தலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்பாட்டின் படி தனியார் அமைப்பு ஒன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் ஈடுபட்டது. அந்த கணிப்புப்படி விக்கிரவாண்டியில் அதிமுக கூட்டணி 15,000 வாக்குகளுக்கு அதிகமாக பெற்று வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. 

அதேபோல நாங்குநேரியில் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவுக்கே வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது’ என்று அதில் சொல்லப்பட்டிருந்தது.இது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

அதே போல் உளவுத் துறை எடுத்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பிலும் இரண்டு தொகுதிகளிலும் அதிமுகவே வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரிசல்ட் முடிவுகள் அதிமுகவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.