விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் வெற்றி உண்மைக்கு கிடைத்த வெற்றி என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். எங்களால் எதை செய்ய முடியுமோ அதைத்தான் சொன்னோம், மக்களும் எங்களை நம்பினார்கள் என்றார். 

சென்னை ராயப்பேட்டை உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்தார். அவருக்கு அதிமுக தொண்டர்கள் பூங்கொத்து, இனிப்புகள் வழங்கியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இடைத்தேர்தல் வெற்றி உண்மைக்கு கிடைத்த வெற்றி என புன்னகையுடன் தெரிவித்தார். 

இதையும் படிங்க;- அதிமுகவில் சசிகலா இணைப்பா..? ஓபிஎஸ் பரபரப்பு பதில்... டிடிவி.தினகரன் என்ன சொல்கிறார்..?

வாக்களித்த மக்களுக்கும், கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார். தொண்டர்களின் உழைப்பால் பெற்ற வெற்றி இதுவாகும். இந்த இடைத்தேர்தல் வெற்றி 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கான முன்னோட்டமாகும். எங்களால் எதை செய்ய முடியுமோ அதைத்தான் சொன்னோம், மக்களும் எங்களை நம்பினார்கள். தர்மம், நீதி வெல்லும் என்பதற்கு இந்த வெற்றி சாட்சி என்றார்.

தமிழகத்திற்கு 6 மருத்துவ கல்லூரிகள் ஒதுக்கீடு செய்த பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி நன்றி தெரிவித்தார். மேலும், முரசொலி அலுவலக கட்டடம் உள்ள இடம் பஞ்சமி நிலமாக இருந்தால் அரசு ஆராய்ந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக கூறியுள்ளார்.