Asianet News TamilAsianet News Tamil

20 தொகுதிகளில் இடைத் தேர்தல்…. வெற்றி யாருக்கு ? உளவுத் துறை ரிபோர்ட்டால் அப்செட்டான இபிஎஸ் – ஓபிஎஸ் !!

விரைவில் 20 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் , அதிமுகவுக்கு  எத்தனை தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என்பது குறித்து உளவுத் துறை அளித்துள்ள ரிப்போர்ட்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. எங்கே இடைத் தேர்தலுக்கும் பிறகு ஆட்சி நீடிக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

by election admk  will get 2 to 4 seats
Author
Chennai, First Published Nov 6, 2018, 11:09 AM IST
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் மற்றும் திருவாரூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 20 தொகுதிகளில் விரைவில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக திமுக, அதிமுக மற்றும் அமமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளன.. by election admk  will get 2 to 4 seats இந்த 20 தொகுதிகளில் குறைந்தது 8 தொகுதிகளைப் பெற்றால்தான் எடப்பாடி பழனிசாமி தனது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். இந்நிலையில் இடைத் தேர்தல் குறித்து உளவுத் துறை முதலமைச்சரிடம் அளித்துள்ள ரிப்போர்ட் அவரை அப்செட் ஆக்கியுள்ளது. by election admk  will get 2 to 4 seats அந்த ரிப்போர்ட்டில் இடைத் தேர்தல் நடக்கப் போகும் 20 தொகுதிகளில் 10 தொகுதிகளை திமுக கைப்பற்றும் என்றும், டி.டி.வி.தினகரனின் அமமுக  6 லிருந்து 8 தொகுதிகள் வரை கைப்பற்றும் என்றும் தெரிவித்துள்ளது.   ஆனால் 2  முதல் 4 தொகுதிகளில் மட்டுமே அதிமுகவுக்கு கிடைக்கும் என்றும், இது கூட இழுபறியாகத் தான் இருக்கும் உளவுத் துறை ரிப்போர்ட் தெரிவித்துள்ளது. என்னதான் தங்களிடம் இரட்டை இலை சின்னம் இருந்தாலும் வெற்றி என்பது எட்டாக் கனியாகி விட்டது என்பது ஆளுந்தரப்புக்கு வருத்தத்தை அளித்துள்ளது. by election admk  will get 2 to 4 seats 8 தொகுதிகள் கிடைத்தால் தான் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நிலையில் இடைத் தேர்தல் ரிசல்ட் எப்படி இருக்குமோ என அச்சத்தில் உறைந்து போயிருக்கிறது ஆளுங்கட்சி.
Follow Us:
Download App:
  • android
  • ios