இம்மாதம்  21ஆம் தேதி நடக்க இருக்கும் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத் தேர்தல்களில் அதிமுகவை எப்படியாவது வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக களம் இறங்கி வேலை செய்து வருகிறார்.

இதனிடையே வழக்கம் போல் உளவுத் துறையிடம்  இரு தொகுதிகளின் ஆக்சுவல் நிலவரம் என்ன என்ற ரிப்போர்ட்டை மிகைப்படுத்தாமல் கொடுங்கள் என்று எடப்பாடி கேட்டுள்ளார்., இன்னொருபக்கம் தனக்கு நெருக்கமான அதிமுக கட்சிப் பிரமுகர்கள் மூலமாகவும் இரு தொகுதிகளைப் பற்றி உன்னிப்பாகக் கேட்டு வருகிறார்.

இந்நிலையில்  கடந்த வாரம் சேலம் சென்ற தமிழக முதல்வரிடம் அவருக்கு நெருக்கமான சேலம் பிரமுகர்கள், ‘சேலம் ஜோசியர் பாலாஜி ஹாசன்  குறித்து எடுத்துச் சொல்லி அவரிடமும் கணிப்பு குறித்து கேட்கலாம் என ஐடியா கொடுத்திருக்கிறார்கள்.

எடப்பாடி அதற்கு ஓகே சொன்னவுடன் ஒரு குரூப் உடனடியாக பாலாஜி ஹாசனை சந்தித்து இடைத் தேர்தல் முடிவுகள் குறித்து கணிக்கச் சொல்லியுள்ளனர்.இதைத் தொர்ந்து அவர் கணித்துக் கொடுத்த தகவல் எடப்பாடிக்கு அதிர்ச்சி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி  விக்கிரவாண்டியில அதிமுக ஜெயிக்குமாம். ஆனா, வித்தியாசம் ரொம்ப ரொம்ப கம்மியாய் இருக்கும்னும் 9 அல்லது 99 அல்லது 199 இப்படிங்குற அளவுலதான் வித்தியாசம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனா, நாங்குநேரியில அதிமுக  வேட்பாளரோட ஜாதகம் சரியில்லாததால காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ட்ராங்கா இருக்காராம். காங்கிரஸ் வேட்பாளர் தேர்வுக்கு முன்னாடியே ஜாதகத்தை அவர்கிட்ட கொடுத்து வாங்கிதான் முடிவு பண்ணாங்களாம்.  இதைத் கேட்ட எடப்பாடி நாமும் அது போல செய்திருக்கலாமே என வருத்தப்பட்டிருக்கிறார்.

தற்போது ஜோதிடர் பாலாஜி ஹாசன் சொல்லும் ஜாதகக் காரணங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும் அதிமுகவினர் பிரச்சாரத்தோடு பரிகார நடவடிக்கைகளிலும் தீவிரமாகியிருக்கிறார்கள்.