நிவாரண முகாம்களில் உள்ளவர்களில் யாருக்காவது கொரோனா அறிகுறி தென்பட்டால் உடனடியாக அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டும். வீடுகள் மற்றும் கடைகளில் உள்ள நீர் தேக்க தொட்டிகளை சுத்தப்படுத்த சம்பந்தப்பட்ட மக்களுக்கு பிளீச்சிங் பவுடர் வழங்க வேண்டும்.
நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களிடையே நோய்த்தொற்று பரவாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் அறிவித்துள்ளார். நிவர் புயல் தமிழகம் மற்றும் புதுச்சேரி இடையே கரையை கடந்தது, இதனால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது, இந்த நிலையில் புயல் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு கொரோனா பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர் களுக்கும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அவர் அனுப்பியுள்ள குறுஞ்செய்தியில் தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் ஒருவருக்கொருவர் தனிமனித இடைவெளியை முறையாக கடைப்பிடிக்கவும், முகக்கவசங்கள் அணிந்துள்ளதையும் உறுதி செய்ய வேண்டும். நிவாரண முகாம்களில் உள்ளவர்களில் யாருக்காவது கொரோனா அறிகுறி தென்பட்டால் உடனடியாக அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டும். வீடுகள் மற்றும் கடைகளில் உள்ள நீர் தேக்க தொட்டிகளை சுத்தப்படுத்த சம்பந்தப்பட்ட மக்களுக்கு பிளீச்சிங் பவுடர் வழங்க வேண்டும். மழை நீர் தேங்கிய பகுதிகளில் அதனை உடனடியாக வெளியேற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும்.
தீபாவளி மற்றும் நிவர் புயல் காரணமாக ஏற்படும் நோய் பரவல் பாதிப்புகளை கண்டறிந்து சம்பந்தப்பட்ட பகுதிகளில் அதனை முழுமையாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவும், காலரா, டைபாய்டு கழிவுநீர்கலப்பால் ஏற்படும் நோய்த்தொற்றுகள் ஆகியவற்றை பொதுமக்கள் மத்தியில் பரவாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக தேவையான இடங்களில் மருத்துவ பரிசோதனைகளை விரிவாக நடத்த வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நடமாடும் கொரோனா பரிசோதனை குழுக்கள், மருத்துவர்கள் தேவையான அளவு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Nov 27, 2020, 11:38 AM IST