எரிவதை பிடுங்கினால் கொதிப்பது நின்று விடும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் மது விலக்கை அமல்படுத்த வலியுறுத்தி இருக்கிறார்.

இது குறித்து அவர், ‘’குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் கைது செய்ய வேண்டும் என்ற  உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. எரிவதை பிடுங்கினால் கொதிப்பது நின்று விடும். அதேபோல், மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினால் இதற்கெல்லாம் தேவையிருக்காது.

பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை இலவசங்களை எதிர்ப்பது தான் என்றாலும், பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிகணிணி, இலவச மிதிவண்டி போன்ற பயனுள்ள இலவசங்களை நான் தொடர்ந்து ஆதரித்து வருகிறேன். இத்தகைய இலவசங்கள் தொடர வேண்டும்.

தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படும் மடிகணிணி அறிவுத்திறனை வளர்க்கும்; மிதி வண்டி உடற்திறனை வளர்க்கும். இந்த நோக்கத்தை மாணவச் செல்வங்கள் புரிந்து கொண்டு  அனைத்து வகை உள்ளூர் பயணங்களுக்கும் மிதிவண்டியை பயன்படுத்த வேண்டும்.  நோயற்ற வாழ்வை உறுதி செய்ய வேண்டும்’’என அவர் தெரிவித்துள்ளார்.