மத்திய பட்ஜெட்டில் ஜன்தன் வங்கியில் கணக்கு வைத்திருந்தால் 5000 கடன் உள்ளிட்ட பெண்களுக்கு பல சலுகைகள் வாரி வழங்கப்பட்டுள்ளது. 

பாஜக இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அதில், ’ஜன்தன் வங்கியில் கணக்கு வைத்திருந்தால் 5000 கடன் கொடுக்கப்படும். கிராமப்புற விவசாய தொழில் சார்ந்து 75 ஆயிரம் தொழில் முனைவோர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். அனைத்து கிராமங்களிலும் திடக்கழிவு மேலாண்மை திட்டங்கள் செயல்படுத்தப்படும், கழிவுப் பொருட்களில் இருந்து எரிசக்தி எடுக்க நடவடிக்கை செயல்படுத்தப்படும். 

விவசாயம் சார்ந்த உற்பத்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளில் தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும் நீர் மேலாண்மைக்கு தனித் திட்டங்கள் கொண்டு வரப்படும், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 9.6 கோடி கழிவறைகள் இதுவரை கட்டப்பட்டுள்ளன ஒவ்வொரு ஊராட்சிகளிலும் இணைய சேவை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, நகர்ப்புற வீடுகள் திட்டத்தின் கீழ் 22 லட்சம் வீடுகள் பெறப்பட்டுள்ளன.

செளபாக்கியா யோஜனா, உஜூவாலா யோஜனா 2 திட்டங்களும் கிராமப்புறங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் மின்வசதி உறுதி செய்யப்படும். 2022ம் ஆண்டுக்குள் ஊரக பகுதிகளில் வசிக்கும் 1.9 கோடி குடும்பங்களுக்கு சொந்த வீடு கட்டித் தரப்படும். ஒவ்வொரு சுயஉதவிக் குழுவிலும் உள்ள பெண்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்படும்’’ எனக் கூறப்பட்டுள்ளது.