கர்நாடகாவில் 16 காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியின் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததையடுத்து குமாரசாம் அரசுக்கு கடும் நெருக்கடி  ஏற்பட்டது. அதிருப்தி எம்எல்ஏக்களை அந்மாநில அமைச்சர் டி.கே.சிவகுமார் எவ்வளவே சமாதானம் செய்ய முயன்றும் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை.

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரே ஒரு பகுஜன் சமாஜ் கட்சியின் எம்எல்ஏ மகேஷ் முதலமைச்சர் குமாராசாமிக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக அறிவித்திருந்தார்.

ஆனால் அக்கட்சியின் தலைவர் மாயாவதி, எம்எல்ஏ மகேஷ் குமாரசாமிக்கு ஆதரவாக வாக்களிப்பார் என தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் கர்நாடக சட்டசபையில் இன்று நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் முதலமைச்சர்  குமாரசாமி அரசு கவிழ்ந்தது.  குமாரசாமிக்கு ஆதரவாக 99 எம்எல்ஏக்களும், எதிராக 105 எம்எல்ஏக்களும் வாக்களித்தனர்.

இந்நிலையில் கர்நாடகாவில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. மகேஷ் , நம்பிக்கை ஓட்டெடுப்பில், பங்கேற்கவில்லை. இதையடுத்து அவரை கட்சியில் இருந்து நீக்கம் செய்து மாயாவதி உத்தரவிட்டுள்ளார்.