BSNL connection muraikketu - Maran brothers to appear in court

பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பை சட்டவிரோதமாக பெற்றதாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன், அவரது சகோதரர் கலாநிதிமாறன் ஆகியோர் மீது சிபிஐ போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு சென்னை கூடுதல் சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை பெறுவதற்காக தயாநிதிமாறன், கலாநிதிமாறன், சன் டிவி ஊழியர்கள் ரவி, கண்ணன், தயாநிதிமாறனின் தனி செயலாளர் கவுதம் ஆகியோர் இன்று சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
அதேபோல் பிஎஸ்என்எல் அதிகாரி பிரம்மநாதன், வேலுச்சாமி ஆகியோரும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
இதை தொடர்ந்து வழக்கை விசாரித்த சிபிஐ நீதிமன்றம், தயாநிதிமாறன் மற்றும் கலாநிதிமாறன் உள்பட அனைவரும் ஆஜரானதால், இந்த வழக்கை நீதிமன்றம் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தது.