இன்று தொடங்கும் ‘பிரிக்ஸ்’ நாடுகள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, சீனாவின் ஜியாமென் நகருக்கு நேற்று சென்றடைந்தார். சீன அதிபர் ஜீ ஜின்பெங்குடன் இன்று பிரதர் மோடி பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டோக்லாம் பகுதியால் இரு நாடுகளுக்கும் இடையே கடந்த 73 நாட்களாக பதற்றம் நீடித்து வருவதால், அது தொடர்பாக இது நாட்டு தலைவர்களும் முக்கிய ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளது.

5 நாடுகளின் தலைவர்கள்

சீனாவின் புஜியான் மாநிலம், ஜியாமென் நகரில் நாளை முதல் 3 நாட்களுக்கு ‘பிரிக்ஸ்’ (பிசேில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா) நாடுகள் கூட்டமைப்பு மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் 5 நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.

இந்த மாநாட்டில் ரஷிய அதிபர் விளாதிமிர்புதின் உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், எகிப்து, கென்யா, தஜகிஸ்தான், மெக்சிக்கோ, தாய்லாந்து ஆகிய நாடுகளை சீனா அழைத்துள்ளது. அந்த நாட்டு தலைவர்களுடனும் மோடி பேசுவார் எனத் தெரிகிறது.

இந்த மாநாட்டின் இடையே சீன அதிபர் ஜீ ஜிங்பென்னுடன், பிரதமர் மோடி நேருக்கு நேர் சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்தியாவின் எல்லைப்பகுதியான டோக்லாம் பகுதியில் சீனா சாலை அமைக்க முயற்சித்தது. அது முதல் இருநாடுகளின் ராணுவத்தினருக்கு இடையே பதற்றம் நீடித்து வருகிறது.

மோடி கருத்து

இதற்கிடையே பேஸ்புக் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்ட கருத்தில், “ கோவாவில் கடந்த ஆண்டு நடந்த பிரிக்ஸ் மாநாட்டின் விளைவுகளையும், பலன்களைம் அறிய ஆவலாக இருக்கிறேன். இந்த முடிவுகள் உறவுகளை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லும். சீனாவின் தலைமையில், பிரிக்ஸ் மாநாட்டில்,  ஆக்கப்பூர்வமான விவாதங்கள், சாதகமான முடிவுகள் வரும் என எதிர்பார்க்கிறேன். பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களுடனும், தொழில்துறையின் தலைவர்களுடனும் நாங்கள் சந்தித்து பேச இருக்கிறோம்.மேலும், சீன அதிபர் ஜீ ஜின்பிங் 5-ந்தேதி நடத்தும் வளர்ந்துவரும் சந்தை மற்றும் வளரும் நாடுகளுக்கான பேச்சு குறித்த மாநாட்டில் 9 நாடுகளின் தலைவர்களுடன் உரையாடுவதிலும் மகிழ்ச்சி அடைகிறேன்’’ எனத் தெரிவித்து இருந்தார்.

மியான்மர் பயணம்

இதற்கிடையே சீனாவில் 3 நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்டு, அங்கு இருந்தவாறு 2 நாள் பயணமாக பிரதமர் மோடி மியான்மர் நாட்டுக்கு முதல் முறையாகச் செல்கிறார். அங்கு அந்நாட்டின் வௌியுறவு  அமைச்சர் ஆன்-சான்-சூகி, அதிபர் யூ-ஹிதின்-கியாவைச் சந்தித்து  பேச்சு நடத்துகிறார். மேலும், அந்நாட்டில் உள்ள முக்கிய நகரங்களான நேபி,யங்கன், பாகன் ஆகிய நகரங்களுக்கும் பிரதமர் மோடி செல்கிறார்.