bribe to get the admk symbol again one person had arrested

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்ற வழக்கில் பாபு என்ற மேலும் ஒருவர் கைதாகியுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இரைட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவும் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் இவர்களுக்கு இடைத்தரகராக செயல்பட்ட சுகேஷ் சந்திராவும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

இந்த தினகரனும் மல்லிகார்ஜுனாவும் ஜாமீன் கேட்டு டெல்லி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம் அரசு தரப்பிடம் கேள்வி எழுப்பியது.

அப்போது, அரசு தரப்பு வழக்கறிஞர் இந்த வழக்கில் பாபு என்ற மேலும் ஒருவர் கைதாகியுள்ளதாக தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து, தினகரன் ஜாமீன் மனு மீதான விசாரணையை 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது டெல்லி நீதிமன்றம். மேலும், மல்லிகார்ஜூனா ஜாமீன் மனு விசாரணையையும் ஒத்திவைத்து உத்தரவிட்டது.