Bribe govt employees will be punished told binarayaee vijayan

கை நிறைய, கண்ணியமான சம்பளம் பெறும் அரசு அதிகாரிகள் சிலர் லஞ்சம் வாங்குவதால் அரசு நிர்வாகத்துக்கு கெட்ட பெயர் ஏற்படுவதாகவும், இத்துடன் இதை நிறுத்திக் கொள்ளாவிட்டால் அவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பங்கேற்றுப் பேசினார்.

அப்போது , அரசு அதிகாரிகள் யார் லஞ்சம் வாங்கினாலும் கடுமையான நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என எச்சரித்தார். இதைப் போன்ற சில அதிகாரிகளின் செயல்பாடுகள் ஒட்டுமொத்தமாக அரசு இயந்திரத்துக்கே அவப்பெயரை எற்படுத்தி விடுகிறது என்றும் குற்றம்சாட்டினார்..

அரசு ஊழியர்களின் தேவைக்கேற்ப, நியாயமான, கைநிறைய சம்பளம் தரப்படுகிறது, எனவே, அதற்கேற்ப கண்ணியமாக வாழ அவர்கள் கற்றுகொள்ள வேண்டும் எனவும் பினராயி விஜயன் குறிப்பிட்டார்.