288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்ட்ரா சட்டசபைக்கு தேர்தல் முடிவு வெளியாகி நேற்றுடன் 17 நாட்கள் ஆன போதிலும், புதிய அரசு அமையவில்லை. தேர்தலில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணி கட்சிகள் ஆட்சி அமைக்காமல் மோதல் போக்கை கடைப்பிடித்தன.
 
முதலமைச்சர்  பதவியை 2½ ஆண்டுகள் தங்களுக்கு பகிர்ந்து தர வேண்டும் என்று சிவசேனா பிடிவாதமாக இருந்தது. இதற்கு பாரதீய ஜனதா உடன்பட மறுத்து விட்டது.


இந்த மோதல் காரணமாக முதலலமைச்சர்  தேவேந்திர பட்னாவிஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். மாற்று ஏற்பாடு செய்யும் வரை காபந்து முதலமைச்சராக செயல்படுமாறு அவரை கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி கேட்டுக்கொண்டார்.

ஆனால் தொடர்ந்து தீர்க்க முடியாத அளவுக்கு சிக்கல் உருவானதால் ஆட்சி அமைக்கப்பபோவதில் என பாஜக அறித்தது, அதே நேரத்தில் சிவசேனா கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். 

ஆனால் சிவசேனாவுக்கு ஆதரவி அளிக்க வேண்டும் என்றால் மத்திய அமைச்சரவையில் இருந்து சிவசேனா விலக வேண்டும் என்றும் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டும் என்றும் தேசியவாத காங்கிரஸ் நிபந்தனை விதித்தது.

இதையடுத்து சிவசேனா கட்சியைச் சேர்ந்த மத்திய கனரக மற்றும் நிறுவனங்களின் துறை அமைச்சராக அரவிந்த் சாவந்த் தனது  பதவியை ராஜினாமா செய்தார்.
மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறினால், ஆதரவு குறித்து முடிவு என தேசியவாத காங்கிரசின் நிபந்தனை எதிரொலியாக மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக சிவசேனாவின் அரவிந்த் சாவந்த் அறிவித்துள்ளார்.