Asianet News TamilAsianet News Tamil

வெளியேற்றப்படும் பிராமணர்கள்... கோயில் குருக்களின் வைரல் ஆடியோ... குஷியில் பெரியாரிஸ்ட் மற்றும் இடதுசாரிகள்.!

சுப்பிரமணிய கோயிலிலும் 5 குருக்களை வெளியே அனுப்பி வைச்சுட்டா. நான் பிராமினை தூக்கி உள்ளே போட்டுட்டா. 

Brahmins to be expelled ... Viral audio of temple priests
Author
Tamil Nadu, First Published Aug 16, 2021, 1:04 PM IST

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 14-08-2021 அன்று இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையின் கீழ் 24 அர்ச்சகர்கள் உட்பட திருக்கோவில்களில் பல்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 208 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

 Brahmins to be expelled ... Viral audio of temple priests

பணி ஆணையை பெற்ற அவர்கள் இன்று முதல் பணியில் இணைந்துள்ளனர். அதன்படி இன்று கோவில்களில் பணி செய்து கொண்டிருந்த குருக்கள் சமூகம் வெளியேற்றப்பட்டு மற்ற சமூக அர்ச்சகர்கள் நியமனம் நடந்தேறி வருகிறது. இந்நிலையில் பிராமணர்கள் கோவில்களில் இருந்து வெளியேற்றப்படுவது குறித்து ஆடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் பேசும் குருக்கள் ஒருவர், ‘’நான் திருச்சியில் இருந்து விக்னேஷ்வரன் சிவா பேசுகிறேன். மலைக்கோட்டை பிரச்சாரகம் , நாகநாத சுவாமி கோயில் பற்றி கேட்டிருந்தேள். இன்று காலையிலே பணி நியமனம் செய்யப்பட்டவர்கள் பணியில் சேர்ந்து விட்டார்கள். மலைக்கோட்டை பிரச்சாரகத்திலே உள்ளே நுழைஞ்சிட்டா. நாகநாதர் கோயிலிலே காலை சந்தி முடிந்த உடனே நம்ம சிவாச்சாரியாரை வெளியே அனுப்பி விட்டு அவாளுக்கு ட்யூட்டி போட்டுட்டா. சுப்பிரமணிய கோயிலிலும் 5 குருக்களை வெளியே அனுப்பி வைச்சுட்டா. நான் பிராமினை தூக்கி உள்ளே போட்டுட்டா. சமயபுரத்திலும் அதே நிலைமை தான் அண்ணா. இன்னைக்கு காலையிலேயே போலீஸை வைச்சு மாற்று சமுதயாத்தாளை உள்ளே விட்டு குருக்களை வெளியேற்றி விட்டார்கள்’’ எனத் தெரிவித்துள்ளார் Brahmins to be expelled ... Viral audio of temple priests

இதுகுறித்து, கருத்து தெரிவித்துள்ள பலரும்,  சமூக நீதி வாழ்க! கோவில் கணக்கு வழக்குகளை சரிபார்க்க நியமிக்கப்பட்ட ஒரு துறை, ஒரு சமூகத்திற்கு அநீதி இழைத்துவிட்டது. காஷ்மீரில் இருந்து எப்படி பண்டிட்டுகள் விரட்டியடிக்கப்பட்டார்களோ அதுபோல பிராமணர்களை தமிழகத்தில் இருந்து விரட்ட திராவிட சூழ்ச்சிதான் இந்த தூசிதட்டி எடுக்கப்பட்ட அனைவரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற செயல். அது சரி ஓதுவார்கள் அர்ச்சகர்களா?  
ஆகம விதிகளின்படி புதிதாக நியமிக்கப்பட்ட அர்ச்சகர்கள் செயல்படவில்லையென்றால் பக்தர்கள் அவர்களை புறக்கனிக்கவேண்டும். சில நாட்களில் ஒதுங்கிவிடுவார்கள். ஏனெனில் அவர்களால் இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த பூஜை முறைகளை கடைபிடிக்க முடியாது’’ எனத் தெரிவித்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios