நூலிழையில் தப்பித்த பாஜக வேட்பாளர்... அதிமுக நிர்வாகி மண்டையை பதம் பார்த்த சோடா பாட்டில்..!
ராமநாதபுரம் அருகே பெரியபட்டிணம் பகுதியில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் பிரசாரம் செய்யும்போது மர்மநபர் சோடா பாட்டில் வீசப்பட்டது. இதில் திருப்புல்லாணி அதிமுக ஒன்றிய அவைத் தலைவர் உடையப்பன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
ராமநாதபுரம் அருகே பெரியபட்டிணம் பகுதியில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் பிரசாரம் செய்யும்போது மர்மநபர் சோடா பாட்டில் வீசப்பட்டது. இதில் திருப்புல்லாணி அதிமுக ஒன்றிய அவைத் தலைவர் உடையப்பன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த தொகுதியில் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். அவர் கடந்த சில நாட்களாக தொகுதியில் கூட்டணி கட்சியினருடன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் ராமநாதபுரத்தில் உள்ள திருப்புல்லாணி ஒன்றிய பெரியபட்டினம் பேருந்து நிலையம் அருகே வாகனத்தில் நின்றவாறு நேற்று பிரச்சாரம் செய்தார். அவருடன் அமைச்சர் மணிகண்டன், அன்வர்ராஜா, பாஜக நிர்வாகி உள்ளிட்டோர் உடனிருந்தனர். அப்போது பூட்டியிருந்த வீட்டின் 2-வது மாடியில் இருந்து சிலர், நயினார் நாகேந்திரன் மீது சோடா பாட்டில்களை வீசினர்.
அது பிரச்சார வாகனத்தின் அருகே நின்ற அதிமுக திருப்புல்லாணி ஒன்றிய அவைத் தலைவர் உடையத்தேவர் (52) தலையில் விழுந்தது. இதில் பலத்த காயம் ஏற்பட்ட அவர் ரத்த சொட்ட சொட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். உடையத்தேவருக்கு தலையில் 12 தையல்கள் போடப்பட்டுள்ளது. இதனையடுத்து சோடா பாட்டில் வீசிய நபர் அங்கிருந்து தப்பித்து சென்றார்.
இதனையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சோடா பாட்டிலில் படுகாயமடைந்த உடையத்தேவலை அமைச்சர் மணிகண்டன் நேரில் சென்று நலம்விசாரித்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.