bomb throw in police station

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தை ஒட்டி மக்கள் ஊர்வலத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை துப்பாக்கி சூட்டில் பலர் படுகாயம் அடைந்தனர். 13 பேர் பலியாகியுள்ளார். இந்நிகழ்வு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. துப்பாக்கி சூட்டை கண்டித்து பொதுமக்கள் தன்னெழுச்சியாய் போராட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முழுவதும் திமுக மற்றும் அனைத்துகட்சிகளும் மாநிலம் முழுவதும் மறியல் மற்றும் கடையடைப்பு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

தூத்துகுடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் இருந்துவருகிறது. இயல்பு நிலைக்கு கொண்டு வர அரசு பேருந்துகள் நேற்று காலையிலிருந்து இயக்கப்பட்டன. நேற்று மதியம் உடன்குடியில் அரசு பேருந்துக்கு தீவைக்கப்பட்ட்டது.இதனால் மீண்டும் பதட்டநிலையை அடைந்தது தூத்துக்குடி மாவட்டம். நெல்லை ம்ற்றும் கன்னியாகுமரியில் இணைய சேவையை மீண்டும் துவங்கியுள்ளது. 

இந்நிலையில் இன்று தூத்துக்குடியில் காவல்நிலையம் மீது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர் மர்ம நபர்கள். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் காவல்நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். சிசிடிவி காட்சி பதிவை வைத்து பெட்ரோல் குண்டு வீசியவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனால் இயல்பு நிலை திரும்ப அரசு பல முயற்சிகள் எடுத்திருந்தாலும் மக்கள் மத்தியில் இந்த துப்பாக்கி சூடு பெரும் ரணத்தை ஏற்படுத்தியுள்ளதென் தெரிகிறது. துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களில் 19 பேர் இன்னும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதால் மக்கள் மத்தியில் அரசு மீது கடும் அதிர்பதி இருந்து வருகிறது.