ஏழு படுக்கையறை,  பதினோரு குளியலறை,  வசதிகளுடன்கூடிய சொகுசு பங்களாவை பிரபல பாலிவுட் நடிகை விலைக்கு வாங்கியுள்ளார்.  முன்னாள் உலக அழகியும் பாலிவுட் நடிகையுமான பிரியங்கா சோப்ரா,  நிக் ஜோனஸ் தம்பதியர் சுமார் 144 கோடி ரூபாய் மதிப்பில் அமெரிக்காவில் சொகுசு வீடு வாங்கியுள்ளனர்.  பாலிவுட் திரையில் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்க பாப் பாடகரான   நிக் ஜோன்ஸ்சை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 

அவரது காதல் திருமணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது,  தன்னை விட மிகவும் இளையவரான,   நிக் ஜோனஸை அவர்  திருமணம் செய்து கொண்டது பரபரப்பாக பேசப்பட்டது இதைத்தொடர்ந்து கணவர் மற்றும் பிரியங்கா சோப்ராவும் அமெரிக்காவில் குடியேறினார் .  லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் புதிய வீடு வாங்க வேண்டும் என தனது விருப்பத்தை சமீபத்தில் பிரியங்கா தெரிவித்திருந்தார்.  இந்நிலையில் கடந்த  ஆகஸ்ட் மாதம் முதலே நவீன  வசதிகளுடன்  கூடிய வீட்டை  இருவரும் தேடி வந்தனர் .  இந்நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் என்சினோ பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய சொகுசு வீட்டைப் பிரியங்கா தம்பதியினர் வாங்கியுள்ளனர். இந்த வீடு பல வசதிகளை கொண்டுள்ளது.  அமெரிக்காவில் அந்த நாட்டின் மதிப்பில்  சுமார்  20 மில்லியன் டாலர் எனவும் , இந்திய மதிப்பில் 144 கோடி ரூபாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  

சுமார் 20,000 சதுர அடி கொண்ட இந்த பிரம்மாண்ட சொகுசு வீட்டில், பிரத்தியேகமாக ஏழு படுக்கையறைகள்,  பதினோரு குளியலறைகள்,  அமைந்துள்ளன கண்காணிப்பு கேமராவுடன் கூடிய கதவுகள், உள்ளிட்ட  நவீன வசதிகள் உள்ளன அத்துடன் கண்ணாடி பதிப்பிக்கப்பட்ட உடற்பயிற்சி அறை,  நவீன ஹோட்டல்களில் உள்ளது போன்ற மதுபான அறை,  கூடைப்பந்து ஆடுகளம்,  பாதாள வாகன நிறுத்தம்,  என இன்னும் பல வசதிகள் இடம் பெற்றுள்ளன. என்சினோ  பகுதியில் வீடு வாங்கியதன் மூலம் கால்பந்து வீரர்  டூயேன் பிரோன் , நடிகர் ஜாய் லாரன்ஸ் உள்ளிட்டோர்,  ப்ரியங்காவின் பக்கத்து வீட்டுக்காரர்கள் ஆகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது