Asianet News TamilAsianet News Tamil

சோனியா,ராகுல்காந்தி உள்ளிட்டோருக்கு கருப்பு பூனை படைப்பாதுகாப்பு ரத்து.!!மத்திய அரசு அறிவிப்பு

முன்னாள் பிரதமர் உள்ளிட்ட மிக முக்கிய தலைவர்களுக்கு கருப்பு பூனைப்படை பாதுகாப்பு அளித்து வந்தது. அந்த பாதுக்காப்பில் மத்திய அரசு கைவத்திருக்கிறது. சோனியாகாந்தி உள்ளிட்ட தலைவருக்கு கருப்பு பூனைப்படை பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

Black Cat Catalog Security Cancellation for Sonia, Rahul Gandhi
Author
Delhi, First Published Feb 12, 2020, 7:47 AM IST

   BY; Balamurukan

 முன்னாள் பிரதமர் உள்ளிட்ட மிக முக்கிய தலைவர்களுக்கு கருப்பு பூனைப்படை பாதுகாப்பு அளித்து வந்தது. அந்த பாதுக்காப்பில் மத்திய அரசு கைவத்திருக்கிறது. சோனியாகாந்தி உள்ளிட்ட தலைவருக்கு கருப்பு பூனைப்படை பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

Black Cat Catalog Security Cancellation for Sonia, Rahul Gandhi

அப்போ, யாருக்கு தான் கருப்பு பூனைப்படை பாதுகாப்பு தருவாங்களாம்..., பிரதமர், அவரது அதிகாரபூர்வ இல்லத்தில் வசிக்கும் அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டும் கருப்பு பூனைப்படை பாதுகாப்பு அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமராக இருந்தால், அவர் பதவி விலகிய நாளில் இருந்து 5 ஆண்டுகள்வரை அவருக்கும், அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கப்படும்.

 முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அவருடைய மனைவி குர்சரண் கவுர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோருக்கு கருப்பு பூனைப்படை  பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. அவர்களுக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை  பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

Black Cat Catalog Security Cancellation for Sonia, Rahul Gandhi

 பாராளுமன்றத்தில் ,மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பதில் அளித்த மத்திய உள்துறை இணை மந்திரி ஜி.கிஷன் ரெட்டி, தற்போது பிரதமருக்கு  மட்டுமே கருப்பு பூனைப்படை பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதாகவும், 56 முக்கிய பிரமுகர்களுக்கு சி.ஆர்.பி.எப். பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Black Cat Catalog Security Cancellation for Sonia, Rahul Gandhi

கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து யாருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது, யாருக்கு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது என்று துணைக்கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கிஷன் ரெட்டி பதிலளித்து பேசுகையில்...,'ஒருவருக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல் அளவின் அடிப்படையில் மத்திய பாதுகாப்பு அமைப்புகள் பாதுகாப்பு அளிக்கின்றன. இந்த ஆய்வு அவ்வப்போது மேற்கொள்ளப்படுகிறது. ஆய்வின் அடிப்படையில், பாதுகாப்பு நீட்டிக்கப்படுகிறது அல்லது மாற்றி அமைக்கப்படுகிறது.என்றார்

Follow Us:
Download App:
  • android
  • ios