அப்போது மனுதாரர் கோபிநாத் சார்பில் இடையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் ஏற்கனவே மேட்டுப்பாளையம், நீதிமன்றத்தில் இனி வெறுப்புடன் பேச மாட்டேன்  என்று மனுத்தாக்கல் செய்து விட்டு மீண்டும் அதே போன்று பேசுவதாக சுட்டிக்காட்டப்பட்டது, தொடர்ந்து கல்யாணராமன் நீதிமன்ற உத்தரவை மதிப்பதில்லை, அவரை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதுடன், மத மோதலை உருவாக்கும் விதமாக அவரது பேச்சுக்கள் இருந்து வருகிறது,

பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் என்ன சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா? என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கல்யாணராமன் நீதிமன்றத்தை மதிக்க மாட்டார், காவல்துறையை மதிக்க மாட்டார், சட்டத்தை மதிக்க மாட்டார் என்றால் அவர் என்ன சட்டத்துக்கு அப்பாற்பட்டவரா என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

தமிழக பாஜகவில் எச்.ராஜாவுக்கு அடுத்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி பிரச்சினையில் சிக்கிக் கொள்ளும் நபர்தன் கல்யாணராமன். தனக்கு எதிர் கருத்துள்ள எவரையும் சாதாரணமாக இழிவு படுத்தி பேசுவதில் கல்யாண ராமனுக்கு நிகர் கல்யாண ராமன்தான். எப்போதும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை பகிரங்கமாக பேசுபவர், பல இடங்களில் அதற்கு நேரெதிரான திராவிட சித்தாந்தத்தை மிக மோசமாக தரம் தாழ்ந்த வார்த்தைகளில் விமர்சிக்க கூடியவராகவும் இருந்துவருகிறார் கல்யாணராமன். பெண்களை கொச்சைப் படுத்துவது, இதேபோல் இஸ்லாமியர்களை சமூகவலைதளத்தில் குறிவைத்து அவர்களுக்கு எதிராக கருத்து பதிவிடுவது, கிறிஸ்தவர்களை அன்னிய நாட்டின் கைக்கூலிகள் என விமர்சிப்பது என எப்போதும் சர்ச்சைக்குரிய நபராகவே இருந்து வருபவர்தான் கல்யாண ராமன்.சென்னை நங்கநல்லூரில் சேர்ந்த இவர் தமிழக பாஜகவின் செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.

பாஜக சார்பில் தொலைக்காட்சி விவாதங்களில் இவர் கலந்து கொண்டு வந்த நிலையில், அவரின் பேச்சுகள் தரமானதாக இல்லை என்பதால் அவரை விவாதத்திற்கு அழைப்பதையே பல ஊடகங்கள் நிறுத்திக் கொண்டன. அந்த அளவிற்கு வெறுப்பு பேச்சுக்கு சொந்தக்காரர் கல்யாணராமன். இதுபோன்ற பேச்சுக்காக பலமுறை கைது செய்யப்பட்டு சிறையில் இருந்துள்ளார் அவர். ஒவ்வொரு முறையும் விடுதலையானவுடன் மீண்டும் பழைய பாணியில் பேசத் தொடங்கிவிடுவார் என்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் நபிகள் நாயகம் குறித்து அவர் பேசியது பேச்சு இஸ்லாமியர்களையும் கொந்தளிப்படைய வைத்தது. இவரின் பல பதிவுகள் இஸ்லாமியர்களை கொச்சைப்படுத்தும் வகையிலேயே இருக்கும், பலமுறை பல இஸ்லாமிய அமைப்புகள் இவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் என புகார் கொடுத்துள்ளன. 

தனது வெறுப்பு பேச்சுக்கள் மூலம் இஸ்லாமியர்களை வன்முறைக்கு தூண்ட வேண்டும் என்பதே இவரது நோக்கமாக இருந்து வருகிறது என்றும் பலர் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் மு.க ஸ்டாலின் ஆகியோர் குறித்து சமூக வலைதளத்தில் இவர் அவதூறாக பேசி வந்த நிலையில், திமுகவைச் சேர்ந்த கோபிநாத் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார் கடந்த அக்டோபர் மாதம் கல்யாணராமனை நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் மீது 2வது முறையாக குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இந்நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கல்யாணராமன் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் கோபிநாத் சார்பில் இடையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் ஏற்கனவே மேட்டுப்பாளையம், நீதிமன்றத்தில் இனி வெறுப்புடன் பேச மாட்டேன் என்று மனுத்தாக்கல் செய்து விட்டு மீண்டும் அதே போன்று பேசுவதாக சுட்டிக்காட்டப்பட்டது, தொடர்ந்து கல்யாணராமன் நீதிமன்ற உத்தரவை மதிப்பதில்லை, அவரை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதுடன், மத மோதலை உருவாக்கும் விதமாக அவரது பேச்சுக்கள் இருந்து வருகிறது, இந்நிலையில் அவர் மீது காவல்துறை வழக்கு தொடர்ந்தது சரிதான், எனவே அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதையடுத்த மனுதாரர் நீதிமன்றத்தை மதிக்க மாட்டார், காவல்துறையை மதிக்க மாட்டார், சட்டத்தை மதிக்க மாட்டார் என்றால் கல்யாணராமன் என்ன சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்தார். மேலும் அடுத்த நான்கு வார காலத்திற்குள் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.