வரும் மே மாதத்துடன் பாஜக ஆட்சி முடிவடையவுள்ள நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் எப்படியாவது ஜெயித்துவிட வேண்டும் என  காங்கிரஸ் மற்றும் பாஜக தீவிரமாக பணியாற்றி வருகின்றன.

கடந்த மாதம் நடைபெற்ற ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச சட்டமன்றத்  தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. கிட்டத்தட்ட 2 மாதங்களே ஆன நிலையில் இந்த இரு மாநிலங்களிலும் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கு வெற்றி கிடைக்கும் என டைம்ஸ் நவ் - விஎம்ஆர் நிறுவனங்கள் கருத்துக் கணிப்பில் ஈடுபட்டன.

மத்திய பிரதேசத்தில் மொத்தம் உள்ள  29 இடங்களில் பாஜக 23 இடங்களை வெல்லும் என்றும்,  காங்கிரஸ் 6 இடங்களில் மட்டுமே வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் உள்ள 25 இடங்களில் பாஜக 17 இடங்களையும்,  காங்கிரஸ் 8 இடங்களையும் வெல்லும் என்றும்,. பகுஜன் சமாஜ் உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்கு ஒரு இடம் மட்டுமே கிடைக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.உத்ரகாண்டைப் பொறுத்தவரை அங்குள்ள  5 இடங்களிலும்  பாஜகவே ஜெயிக்கும் என அந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அண்மையில் காங்கிரஸ் வெற்றி பெற்ற மாநிலங்களின் நிலைமை தற்போது தலைகீழாக மாறியுள்ளது காங்கிரஸ் கட்சிக்குபெரும் பின்னடைவு என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.